கஞ்சா பிடியில் சிக்கி தவிக்கும்.. சென்னை மாநகரம்..முத்துகிருஷ்ணனிடம் 50கிலோ கஞ்சா…சிபிஐ விசாரணைக்கு வழக்கு…

மக்கள்செய்திமையம் 1.5.18 அன்று கஞ்சா சேதி தெரியுமா…காவல் முத்துகிருஷ்ணனின் கஞ்சா சாம்ராஜ்ஜியத்தை வெளியிட்டது…மயிலாப்பூர் காவல் நிலைய துணை ஆணையர் சரவணன் ஐ.பி.எஸ், குற்ற எண்.237/2018 21.4.18ல் அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சுமோட்டவாக பிடித்த ஒரு கிலோ கஞ்சாவுக்கு, பட்டினப்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் முத்துகிருஷ்ணனுக்கு தொடர்பு இருக்கிறது என்று இணை ஆணையருக்கு கடிதம் எழுதி, கடித நகலை பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ஆனால் உண்மையில் நாம் சொன்ன கஞ்சா குற்ற எண்.235/18 21.4.18ல் பிடிப்பட்ட கஞ்சா 1.200 கிலோ…இந்த கஞ்சாவுக்கும் காவலர் முத்துகிருஷ்ணன், கண்ணகி நகர் சுப்ரமணி மூலம் விற்கும் போது, முண்டக்கண்ணிம்மன் இரயில் நிலையம் அருகே தனிப்படையை சேர்ந்த இளையராஜா சுமோட்டவாக பிடித்தார்..

 2.5.18ல் சின்னமலையில், கிருத்துவ பள்ளிக்கு அருகில் கோபு, தனசேகர் இருவரும் கஞ்சா விற்பனை செய்துக்கொண்டு இருந்தது, கோட்டூர்புரம் எஸ்.ஐ பொன்.திலக்குக்கு தெரிய வர சுமோட்டவாக பிடித்த கஞ்சா 1.200கிலோ…குற்ற எண்.404/2018 2.5.18…

 இது என்ன சுமோட்டோ கதை புரியவில்லை.. சாதாரண போலீசாருக்கு கஞ்சா விற்பனை இரகசிய தகவல் வரும் போது, உயரதிகாரிகளுக்கு வராதா…இதோ உண்மை…

 குற்ற எண்.237/18ல் கஞ்சா பிடிப்பட்டது தொடர்பாக தலைமை காவலர்  முத்துகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியதில், முத்துகிருஷ்ணன் கஸ்டடியில் 50கிலோ கஞ்சா இருந்துள்ளதாக தெரிகிறது..50 கஞ்சா முத்துகிருஷ்ணனிடமிருந்து பிடிப்பட்டால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சென்னை காவல்துறைக்கு அவமானம் என்பதால், 50கிலோ கஞ்சா விற்றதாக, பழைய கஞ்சா வியாபாரிகள், பழைய குற்றவாளிகள், கூலிக்கு சிறைக்கு செல்பவர்கள் மூலம் கஞ்சா பிடிப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது…

    235/18ல் 1.200கிலோ, 237/18ல் 1கிலோவுக்கு அதிமாக, 404/2018ல் 1.200 கிலோ கஞ்சா…. பிடிப்பட்ட கஞ்சா எடையை கூட மாற்றத் தெரியவில்லையே…

  எதற்கு எடுத்தாலும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன், 2.5.18ல் பிடிப்பட்ட கஞ்சா தொடர்பாக மெளனமாக இருப்பது ஏன்…ஒ..பிடிப்பட்ட கஞ்சா இல்லை … கணக்கு காட்டும் கஞ்சா தானே என்று அய்யாவுக்கு தெரியும்…

 சென்னை முழுவதும் கஞ்சா தொடர்பாக போடப்பட்ட குற்ற எண்களை ஆய்வு செய்ததில், சென்னை மாநகரமே கஞ்சா பிடியில் தவிக்கிறது நமக்கு உறுதியானது…

  கஞ்சா தொடர்பாக வழக்கை பார்க்கும் போது, தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் சிவக்குமார் உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரிகளுக்கு  தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது..

   மக்கள்செய்திமையம் கஞ்சா பிடிப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கோரி வழக்கு தொடர முடிவு செய்துள்ளது…

 

 

Comments

comments