ஒரே நம்பரில் இரண்டு பேரூந்து.. வசூல் அரசுக்கு ஒண்ணு..அமைச்சருக்கு ஒண்ணு…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கொடி அசைக்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேருந்து சாவியை கொடுக்க, சில நாட்களுக்கு முன்பு புதிய TNSTC சேலம் புதிய பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டது..

 சேலம் – மேட்டூர் மன்மதராசா பெயரில் இரண்டு பேருந்துகளின் கொள்ளை கதையை கேளுங்கள்.. ஒரு பேருந்து பச்சை கலர், மற்றொரு பேருந்து காவி கலர்… ஆனால் இந்த இரண்டு பேருந்துகளின் எண்..TN 30 N 1038.. ஒரே எண்ணில் இரண்டு பேருந்துகள்  எப்படி இயக்க முடியும் என்று கேள்வி கேட்காதீர்கள்..குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவீர்கள்..

 1991-96ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்த போது, இப்படி ஒரே எண்ணில் 100 பேருந்துகள் இயக்கப்பட்டது..50 பேருந்து தினசரி வசூல் உதவியாளர் எழிலழகன்[தற்போது செய்தித்துறையில் கூடுதல் இயக்குநர்] மூலம் அமைச்சர் வீட்டுக்கு போய்விடும்..50 பேருந்து தினசரி வசூல் அரசு போக்குவரத்துக்கழகத்தில் செலுத்தப்பட்டுவிடும்…

 அதே பாணியில் சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் – மேட்டூர் இரண்டு பேருந்துகள் ஒரே எண்ணில்  TN 30 N 1038 ஒடுகிறது.. தினசரி ஒரு பேருந்து வசூல் அமைச்சர் வீட்டுக்கு, தினசரி இன்னொரு பேருந்து வசூல் அரசு போக்குவரத்துக் கழகத்தின் டெப்போவில் செலுத்துவிடுகிறார்.. அமைச்சர் வீட்டுக்கு வசூல் செல்லும் பேருந்து டிரைவர், நடத்துனர் சம்பளம் போக்குவரத்துக் கழகத்திலிருந்து கொடுத்துவிடுவார்கள்..ஒரே எண்ணில் இரண்டு பேருந்துகள் சேலத்தில் 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது.. கோவையில் 42 பேருந்துகள், திருப்பூரில் 20 பேருந்துகள், ஈரோட்டில் 30 பேருந்துகள் இயக்கப்படுகிறதாம்…

   பிறகு எப்படி அரசு போக்குவரத்துக் கழகம் இலாபத்தில் செயல்படும்..

சேலம் – மேட்டூர் இரண்டு பேருந்துகள் ஒரே எண்ணில்  TN 30 N 1038 உள்ள படம் நமக்கு 23.4.18ல் அன்று கிடைத்தது. 24..4.18ல் சேலம்  அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு இரண்டு பேருந்துகளின் படங்களுடன் புகார் கடிதம் அனுப்பினோம். ஆனால் 14.5.18 வரை பதில் இல்லை.

அதே 24.4.18 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி ஒரே எண்ணில் இரண்டு பேருந்துகள் இயக்குவது குறித்து, தகவல்கள் கேட்டு கடிதம் அனுப்பினோம். ஆனால் அந்த கடிதம் திரும்பி வந்துவிட்டது. 

 பிறகுதான் ஒரே எண்ணில் இயக்கப்படும் இரண்டு பேருந்துகள் தொடர்பான செய்தி வெளியிட்டு உள்ளோம்..

   ஒரே எண்ணில் உள்ள இரண்டு பேருந்துகளின் போட்டோவை வெளியிட்டு உள்ளோம்…போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் சொல்லுவாரா…

 அதிமுக அரசின் செய்தி தொடர்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் பதில் சொல்லுவாரா…

                          

 

Comments

comments