ஒட்டியாணம் வாங்கி கொடுத்தேன் ..செபாஸ்டின் புலம்பல்…மதுரையில் செபாஸ்டின் ஆதரவு அதிகாரிகள் ஆலோசனை..

கராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநராக இருந்த செபாஸ்டின், 31.5.18ம் தேதி ஒய்வு பெறும் நிலையில் 29ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்…செபாஸ்டின் மீது ஊழல் வழக்குகள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.. ஆனால் செபாஸ்டின் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு கொடுத்துள்ளதாக தகவல்.. ஆனால் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் மதுரை மாநகராட்சி ஊழல்களை விசாரிக்க தொடங்கிவிட்டார்கள்..

 நகராட்சி  நிர்வாகத்தில் கடந்த 5ஆண்டுகளாக நடந்த பல ஊழல்களில், ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கும் தொடர்பு உண்டு. ஆனால் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நேர்மையான அதிகாரி போல் நடித்துக் கொண்டு இருக்கிறார்..

  6.5.18ம் அன்று பெருந்துறையில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யின் மாமியார் வீட்டில், பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யின் மகள் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டார்கள்.. செங்கல்பட்டு ஆர்.டி.எம்.ஏ இளங்கோவன்  தங்க நாணயங்களை அள்ளிக்கொடுத்தார்…

  கூடுதல் இயக்குநராக இருந்த செபாஸ்டின் குடும்பத்துடன்  மாலை விழாவுக்கு செல்லாமல், மதியம்  12மணியளவில் சென்றார். பிரகாஷ் ஐ.ஏ.எஸ் கட்டித்தழுவி வரவேற்றார்…செபாஸ்டின் கொடுத்த அன்பளிப்பை பிரித்த பார்த்தவுடன், பிரகாஷ் ஐ.ஏ.எஸ் மகழ்ச்சியடைந்து, செபாஸ்டியான் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள்..

                   அப்படின்னா.. அன்பளிப்பு….சிம்பிள்தான்.. ஒட்டியாணம்….

ஒட்டியாணம் அன்பளிப்பாக கொடுத்தேன், என்னை சஸ்பெண்ட்டிலிருந்து காப்பாற்றவில்லை. சஸ்பெண்ட் நகல் கேட்டேன் அதுவும் கொடுக்கவில்லை என்று செபாஸ்டின் புலம்பி வருகிறார்..

  செபாஸ்டின் சஸ்பெண்ட்…அமைச்சருக்கு நன்றி..நன்றி என்ற வால்போஸ்டர்கள் எழிலகத்தில் ஒட்டப்பட்டு இருந்தது..நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் பணியாற்றும் அதிகாரமுள்ள அதிகாரி திருநாவுக்கரசு பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார்.. ஏனென்றால் செபாஸ்டினுக்கு நெருக்கமானவர்… உடனடியாக அலுவலக உதவியாளர்கள் மூலம் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை கிழித்தார்…செபாஸ்டியன் விசுவாசம்… சம்பளம் வாங்குவது தமிழக அரசிடம் என்பதை திருநாவுக்கரசு மறந்துவிட்டார்…

 மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் மதுரம் பின்னணியில் வெள்ளிக்கிழமை 1.6.18 அன்று மாலை மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் செபாஸ்டின் ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் செபாஸ்டியானுக்கு ஆதரவாக செயல்படவும், இலஞ்ச ஒழிப்பு, சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவெடுத்தார்கள்..…

   உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு எதிராக, செபாஸ்டின் ஆதரவாளர்கள் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..

 

 

Comments

comments