ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..

தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி இல்லாத, மற்ற துறையிலிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வில்(NON –Revenue confired IAS) இரண்டு இடங்கள் காலியாக இருந்தது. ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகளிலிருந்து 10 பேர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் நடத்தும் நேர்முக தேர்வில் கலந்துக் கொண்டார்கள்..

  ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தாலும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரகத்தில் பணியாற்றாமல் சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநராக கடந்த 10 ஆண்டுகளாக வேலையே இல்லாமல் ஜாலியாக பணியாற்றும் கிளாடுஸ்டோன் புஷ்பராஜ் பெயரை அதிமுக அரசு பரிந்துரை செய்துள்ளது.

 சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்தில் ரூ283 கோடிக்கு என்ன திட்டம் செயல்படுத்தப்பட்டது  என்று வெள்ளை அறிக்கை வெளியிட்டால் நல்லாயிருக்கும்..

 தமிழக அரசின் வரலாற்றில் சுகாதாரத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் பதவி  உயர்வுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. ஏன்.. நேர்முக தேர்வுக்கே செல்வதில்லை..

 சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குநர் டாக்டர் செல்வநாயகம்,  இணை இயக்குநர் டாக்டர் உமா இருவரில் ஒருவருக்கு ஐ.ஏ.எஸ் கிடைக்கும் என்று பரவலாக பேச்சு இருந்தது. கூடுதல் இயக்குநர் டாக்டர் செல்வநாயகம், திருச்சி மாநகராட்சியில் ஆணையர் பொறுப்பில் இருந்த போது, நடந்த ஊழலில் 1998ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டாக்டர் செல்வநாயகத்தின் மீது குற்றச்சாட்டு குறிப்பாணைகள் பல நிலுவைகள் உள்ளது.

  அதிமுக அரசு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக டாக்டர் உமா பெயரை பரிந்துரை செய்திருப்பதாக தெரிகிறது. ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநர் கிளாடுஸ்டோன் புஷ்பராஜ், டாக்டர் உமா இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

 ஐ.ஏ.எஸ்க்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கு மக்களைப்பற்றி தெரியாது.. மக்களிடம் பழகாதவர்கள்..ஒரு கிலோ அரிசி என்ன விலை.. பருப்பு என்ன விலை.. கத்தரிக்காய் என்ன விலை என்றே தெரியாதவர்கள்..

  ஐ.ஏ.எஸ் பதவி உயர்வில் அதிமுக அரசின் பரிந்துரையால் பல நேர்மையான அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்..

 தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கம் உள்ள நேர்மையான அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கொடுத்தால், தமிழ்நாடு வளர்ச்சி பெறும்..

 

 

 

 

   

                                 

 

Comments

comments

About Anbu Admin

Check Also

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…

தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம்  செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 1995 நவம்பரில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் ஊழல் …

Leave a Reply

Your email address will not be published.