ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…

தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம்  செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 1995 நவம்பரில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் ஊழல் அதிகமாகிவிட்டது, இனி எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடமாட்டோம் என்று தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்தது.

 தற்போது அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்ததில் எழுந்துள்ள சந்தேகம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறிய சில தகவல்களின் பேரில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) இருவரை முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று பேட்டியளித்தார்.

 அமைச்சர் ஜெயக்குமார், இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிபிஐ விசாரிப்பது போல் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று விசாரிக்க வேண்டும் என்றார்..

 இதை தொடர்ந்து தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் டி.வி.சோமநாதன் ஐ.ஏ.எஸ் தலைமையில் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் அவர்களை சந்தித்து, அமைச்சர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப்பற்றி தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். அமைச்சர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று கூறினார்கள்.

 இதை தொடர்ந்து மீண்டும் சட்டமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளிக்க, அமைச்சர்களுக்கும் , ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 2011 முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் அமைச்சர்களுடன் ஊழல் கூட்டணி அமைத்த காரணத்தால், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

 2015 மே மாதம் மக்கள்செய்திமையம், சென்னை விமானம் நிலையம் அருகே தமிழக அரசின் ரூ10,000கோடி ஊழல் சிக்கும் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று பிளக்ஸ் போர்டு வைத்தது.போர்டு வைத்து 12 நாட்கள் கழித்து, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டு, முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டேவிதார் ஐ.ஏ.எஸ்யிடம் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முதலில் நீங்க என்ன தப்பு செய்தீர்கள் என்று ஆய்வு செய்யுங்கள், மக்கள்செய்திமையம் உண்மையை சொல்லியிருக்கலாமே என்று கூறியபடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் கொடுத்த புகாரை தூக்கி போட்டார்..

 டேவிதார் ஐ.ஏ.எஸ் ஒய்வு பெற்றப்பிறகு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சங்கத்தலைவர் பொறுப்பில் டி.வி.சோமநாதன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டி.வி.சோமநாதன்  ஐ.ஏ.எஸ், பிரதமர் மோடி அலுவலகத்தில் பணியாற்றிவர்..சோமநாதன் வீட்டு திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டார்..

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் 84/2014ல் தொடங்கப்பட்டது. பதிவுத்துறை அலுவலக பதிவேட்டின் படி சங்கத்தில் 15 பேர் மட்டுமே உறுப்பினராக உள்ளார்கள்..

 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஊழல் கூட்டணி அமைக்காமல்  நேர்மையுடன் செயல்பட்டால், தமிழக அரசின் நிர்வாகம் நல்லாயிருக்கும்.. அமைச்சர்களும் விமர்சனம் செய்யவும் தயங்குவார்கள்.

 

Comments

comments

About Anbu Admin

Check Also

சீரழிந்து போன செய்தித்துறை – 4 – அலுவலக உதவியாளர் குமாருக்கு- ஊடகம் அங்கீகார அட்டை..

செய்தி துறையா.. ஊழல் துறையா -3ல் சங்கர் ஐ.ஏ.எஸ்“Phony”யா என்பதற்கு அர்த்தம் தெரியாமல் பி.ஆர்.ஒ ஷேக்முகமது முதல் கூடுதல் இயக்குநர் …

Leave a Reply

Your email address will not be published.