ஏமாற்றப்பட்ட ஜெயலலிதா சிலை…அதிமுக தொண்டர்கள் கண்ணீர்…

அதிமுகவின் பொது செயலாளரும்,  முதல்வருமான ஜெயலலிதா  5.12.16ல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் மறைந்தார்.. அதிமுக கட்சி இரண்டாக உடைந்த காரணத்தால் 24.2.18ல் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை  திறக்கப்பட்டது. ஜெயலலிதா சிலையை வடிவமைத்த சிற்பி விழாவில் கெளரவிக்கப்பட்டார்..

 ஆனால் ஜெயலலிதாவின் சிலையை பார்த்த, அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தார்கள்..ஜெயலலிதாவின் இயற்கையான உருவத்துடன், சிலை ஒத்துபோகவில்லை.  இது ஜெயலலிதா சிலையே இல்லை என்று அதிமுக தொண்டர்கள் ஆவேசமாக  அமைச்சர்களிடமும், ஒ.பன்னீர்செல்வத்திடமும் சண்டை போட்டார்கள்..அதிமுக அமைச்சர்கள் பலர் ஜெயலலிதா சிலை வடிவமைத்தது சரியில்லை என்று வெளிப்படையாக புலம்பினார்கள்..சமூக வலைத்தளங்களில் ஜெயலலிதா சிலை பற்றி கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டது..

     27.2.18 அன்று அமைச்சர் ஜெயக்குமார், அம்மாவின் [ ஜெயலலிதா] சிலை வடிவமைப்பு சரியில்லை என்று நிறைய புகார்கள் வந்துள்ளது. அதனால் மிக விரைவில் ஜெயலலிதாவின் சிலை சீரமைக்கப்படும் என்று பேட்டி கொடுத்தார்..

 60 நாட்கள் கடந்த நிலையில் ஜெயலலிதா சிலையை சீரமைக்க எந்தவித முயற்சிகளும் எடுக்கவில்லை..அமைச்சர்கள் அதிமுக தலைமை அலுவலகம் செல்வதை தவிர்த்து வருகிறார்கள்..

  ஜெயலலிதாவின் சில சீரமைக்கவில்லை என்று அதிமுக தொண்டர்கள் தினமும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து ஜெயலலிதா சிலையை பார்த்து கண்ணீருடன் புலம்புகிறார்கள்..

ஆனால் அதிமுக தொண்டர்களின் புலம்பல், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களின் காதில் விழவில்லையே..

  ஜெயலலிதாவை ஏமாற்றினார்கள்.. தற்போது ஜெயலலிதா சிலையையும் ஏமாற்றிவிட்டார்கள்…

                             

Comments

comments