என்னை நம்புங்கள்….துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கெஞ்சல்…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 18 கிராம மக்கள் 99 நாட்களா போராட்டம் நடத்தி வந்தார்.. 100 வது நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் நடத்த முடிவு செய்து அறிவித்தார்கள்.. 22.5.18ம் தேதி காலை 18 கிராமத்தை சேர்ந்த 30,000 பேர் புறப்பட்டு, வி.வி.டி சிக்னல் அருகே வந்தார்கள். வி.வி.டி சிக்னல் தாண்டி மூன்றாவது மைல் பாலம் மூன்றாவது மைல் ரவுண்டானா அருகே வரும் போலீசாருக்கும், மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியானார்கள்..

 நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தார்கள். படுகாயமடைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை 28.5.18 அன்று துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ஸ்டெர்லைட் ஆலை மூட அரசாணை வெளியிடுவீர்களா என்று கேட்ட போது, வழக்கு கோர்ட்டில் இருக்கிறது என்று முணு, முணுத்தார்.. எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை..என்னை நம்புங்கள்… என்று கெஞ்சினார்.. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒ.பன்னீர்செல்வத்திடம் சரியாக பேசவில்லை…

 துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மருத்துவமனையைவிட்டு வெளியே சென்றவுடன், டாக்டர்கள் உறவினர்களின் செல்போன்களை பறித்தார்கள்… சிறிது நேரம் பரப்பரப்பானது…  துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசும், படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் செல்போன் மூலம்  வீடியோ  எடுத்தார்கள்..அந்த வீடியோ பதிவுகளை அழித்துவிட்டு திரும்பு கொடுத்துவிட்டார்கள்..

 அரசு டாக்டர் எப்போது, அதிமுக உறுப்பினர்களாக ஆனார்கள் என்பது தெரியவில்லை…

 

Comments

comments