
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்த எடப்பாடி தலைமையிலான அதிமுக, 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை அரசியலிருந்து விரட்டியடிக்கவும், தமிழக மக்கள் ஆதரவை திமுகவுக்கு எதிராக மாற்றவும்பிரபலமான அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க, முக்கிய பங்கு வகித்தவர். அதே போல் பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அமைக்கவும், திட்டங்களை வகுத்து கொடுத்தார். 2012 சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க மேற்கு வங்காளமுதல்வர் மம்தாபானர்ஜி, பிரசாந்த்கிஷோரை சந்தித்து பேசினார்.
சில நாட்களுக்கு புது டில்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகளான RISHIRAJ SINGH, VINESH CHANDEL இருவரையும் சந்தித்து பேசியுள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஒரங்கட்டி, அரசியலிருந்து விரட்டியடிக்கவும், திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, திமுகவுக்கு எதிராக மக்களை திருப்பவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மூவர் அணி பிரசாந்த் கிஷோர் நியமித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோருக்கு ரூ200கோடி கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 2016 மே மாதம் முதல் 2019 ஜூன் வரை அதிமுக அரசில் ஒரு இலட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. எடப்பாடி முதல்வரான பிறகு ஊழலில் தமிழக அரசு சிக்கி மூழ்கிவிட்டது.
ஊழல் அதிமுக அரசு காப்பாற்ற வரும் பிரசாந்த்கிஷோரை, மக்கள்செய்திமையம் சந்திக்க தயாராக உள்ளது. தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க, பிரசாந்த் கிஷோர் செயல்படுத்தும் திட்டங்களை, மக்கள் மத்தியில் ஆதரவு நிலை ஏற்படாத வகையில், அதிமுக அரசின் ஊழலைகளை அடித்தட்டு மக்களிடம் மக்கள்செய்திமையம் கொண்டு செல்லும்.. மும்பாயில் உள்ள ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட மக்கள்செய்திமையம் ஒப்பந்தம் போட்டு உள்ளது.
பிரசாந்த் கிஷோருக்கு, மக்கள்செய்திமையம் சவால்… அதிமுக ஊழல் அரசை காப்பாற்ற பிரசாந்த் கிஷோர் எடுக்கும் முயற்சியை மக்கள்செய்திமையம் முறியடிக்கும்…