ஊழல் அதிகாரிகளை-காப்பாற்றும் DVAC – ஊழலில் சிக்கியதா ஊழல் தடுப்புத்துறை?

தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை(DVAC) ஊழலில் முழ்கிக்கொண்டு இருக்கிறது..ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இணை இயக்குநர் முருகன் ஐ.பி.எஸ் வழக்கம் போல் ஆமாம்..சாமி போட்டு வருகிறார்..

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரும், சென்னை மாநகராட்சியில், துணை மேயர் பெஞ்சுமினுடன் சேர்ந்து ரூ135கோடி ஊழலில் சிக்கிய கே.எஸ்.கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் இருவரும் கூட்டணி அமைத்து MY CHILD MY CARE  பெயரில் டிரஸ்ட் தொடங்கி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் ரசீது இல்லாமல் கோடிக்கணக்கில் கட்டாய வசூல் செய்தார்கள்..

 இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கும், இயக்குநர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும் ஆதாரங்களுடன்  8.10.18ல் புகார் அனுப்பினேன். இந்த புகாரை ஊழல் தடுப்பு  இயக்குநரகம், தலைமைச் செயலாளருக்கு sec.17(A)(1) of prevention of corruption(Amendment) Act 2018ல் அனுப்பி இருக்க வேண்டும்.

 ஆனால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்  நாம் அனுப்பிய புகாரை (Petn.No.10100/2018/PUB/TVM dated 16.10.18) பொதுத்துறை செயலாளருக்கு அனுப்பி உள்ளது.

 பொதுத்துறை செயலாளர் அதிகாரமிருந்தாலும், பயன்படுத்தமாட்டார். நமது புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டார்.. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் மீது நம் புகாரின் மீது கோப்பு உருவாக்கப்படும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க, பொதுத்துறை செயலாளருக்கு அதிகாரமே இல்லை..முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லை.

 முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு ஊழல் தடுப்புத்துறை அனுப்பி இருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை..

 நாம் அளித்த புகாரை, குப்பை தொட்டியில் போட வேண்டும் என்பதற்காக பொதுத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ளார்கள்..

 ஏனென்றால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமியும், திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமாரும்( சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து  மாற்றப்பட்டுவிட்டார்) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமாகிவிட்டார்கள் என்பதுதான் உண்மை…என்ன பரிமாற்றங்கள் நடந்ததோ முருகபெருமானுக்குதான் வெளிச்சம்…

 

 

 

Comments

comments