ஊழலில் மூழ்கிய வட சென்னை அனல் மின் நிலையம் – எரியும் நிலக்கரி – கோடிக்கணக்கில் நட்டம்…

வட சென்னை அனல் மின் நிலையம் யூனிட் -1ல் ECHS பிரிவில்  நிலக்கரி பராமரிப்பு பணியை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் முறையாக சரி வர செய்யாத காரணத்தால் நிலக்கரி எரிந்துக்கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. காட்டுமன்னார்குடியை சேர்ந்த ராதா ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் நெய்வேலி உள்ளிட்ட இந்தியா முழுவதும் நிலக்கரி நிறுவனங்களில் ஒப்பந்தம் எடுத்துள்ளது. மேலும்  வட சென்னை அனல் மின் நிலையத்தில் கோல் ஹேண்டிலிங் சிஸ்டம் யார்டு ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் வசம் தான் உள்ளது. மேலும் பெரிய நிறுவனம் என்பதாலும்,  ஒய்வு பெற்ற மின்சார வாரியத்தின் அதிகாரிகள் ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றுவதாலும், அதிகாரிகளை முறையாக கவனிப்பதாலும் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை.

  மேலும் வட சென்னை அனல் மின் நிலையம் யூனிட் -1 ல் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பர்னஸ் ஆயில் 132 கிலோ லிட்டர் குறைவாக உள்ளது. இதைப்பற்றி புகார் கொடுத்தால் உயர் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

  பண்டகசாலை மேலாளர், தரம் சரியில்லை என்று திருப்பி அனுப்பிய பொருட்கள், 1மணி நேரத்தில் தூத்துக்குடியிலிருந்து இருந்து கொண்டு வருவது, போலி பில் போட்டு மீண்டும் பண்டக சாலைக்கு வருகிறது. கண்காணிப்பு பொறியாளரும் இந்த போலி ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறார்களாம்..

 இதைவிட வேடிக்கை என்னவென்றால் 30 கிலோ பொருளுக்கு ரூ46,000/- வாடகை கூலி என்று பில் கொடுத்து, பணம் வாங்கி செல்கிறார்களாம்.. இந்தியா நிலக்கரி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி இரண்டிலும் நுற்றுக்கணக்கான டன் கணக்கில் குறைகிறது.

  கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகள் அனைவரும் ஊழலுக்கு ஜே..ஜே போடுவதால்,  வட சென்னை அனல் மின் நிலையம் ஊழலில் மூழ்கி வருகிறது..

   ஊழல் நடப்பதை புலம்பும் நேர்மையான அதிகாரிகள் உயிருக்கும்  ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஊழலை வெளியிடும் பத்திரிகையாளர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்..

                 இந்தியா ஜனநாயக நாடுதானா.. ஊழலை ஒழிக்கவே முடியாதா…

 

 

 

 

Comments

comments