ஊரக வளர்ச்சித்துறை- MGNREGS முறைகேடு- Social Audit குழு அறிக்கை

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத் உறுதி திட்டத்தை தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதாக, மத்திய அரசு ஊரக வளர்ச்சி துறைக்கு விருது கொடுத்திருப்பதாக, படங்களுடன் செய்தி வெளியாகி இருக்கும்..

  சென்னை மாவட்டம் தவிர மற்ற 31 மாவட்டங்களில், தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மட்டும் விருது கிடைத்திருக்கும்.. மற்ற 29 மாவட்டங்களில் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மை..

 Social Audit Monitoring குழு Ms janani sridharan and Ms shruti singh இரு அதிகாரிகள் தலைமையில் 6.2.18 முதல் 8.2.18 வரை மதுரை, விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளார்கள்..

  1. மதுரை மாவட்டம் திருமங்கலம் பிளாக், உரப்பனூர் கிராம பஞ்சாய்த்தில் 2016-17ல் ரூ2கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ரூ2கோடியில் முறைகேடு நடந்துள்ளது. ஒருவரே பல கைரேகைகள், கையெழுத்து போட்டு, பணம் பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  2. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிளாக் Periodaipatti கிராமத்திலும் ஊரக வேலைத் திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது.
  3. உரப்பனூர் கிராம பஞ்சாய்த்தில் (ஐ.டி.2904207060) ரூ4.07 இலட்சத்தில் , ஒரு கிமீட்டர் தூரத்தில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டதாக கோப்புகளில் உள்ளது. மரக்கன்றுகள் வனத்துறை இலவசமாக கொடுத்துள்ளது. ஆனால் 111 மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 28 மரக்கன்றுகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. மரக்கன்றுக்கு வேலி போடவில்லை இப்படி பல குற்றச்சாட்டுகளை குழு, தனது அறிக்கையில் கூறியுள்ளது..

 இப்படி தமிழகத்தில் 29மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை  உறுதித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது..

 மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடந்த முறைகேடுகளின் அறிக்கையை வெளிட்டுவிட்டோம்..

  ஊழல் நடக்கவே இல்லை என்று சவால் விடும் அதிகாரிகள், இந்த முறைகேட்டிற்கு பதில் சொல்லுவார்களா…

 

 

Comments

comments