ஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே? ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…

ஊரக வளர்ச்சித்துறையில் அரசாணை எண்.18/1.2.18ல் கிராம பஞ்சாய்த்தில் உள்ள குளம், குட்டை,ஏரிகளுக்கு நீர் செல்லும் 15,000 கீமீட்டர் நீர் வழிப்பாதைகளை புதியதாக அமைக்கவும், பராமரிக்கவும் ரூ387.75கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  12617 கிராம பஞ்சாய்த்தில்  எத்தனை கிராம பஞ்சாய்த்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்ற விவரங்கள் குறிப்புக்கோப்பில் இல்லை. அரசாணையில்  1 கிமீட்டருக்கு ரூ2.55 இலட்சம் என்று உள்ளது.

 ஆனால் இறுதியில் 1கிமீட்டருக்கு ரூ3.50இலட்சம் என ரூ525கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எப்படி ஒரு கிமீட்டருக்கு ரூ95,000/- உயர்வுக்கு காரணம் என்ன… குறிப்புக்கோப்பில் பேசுக…தேவையான கருத்துக்களை எழுதி கோப்பை அனுப்பிவிடலாம் – இதையெல்லாம் கண்டறிந்த பிறகு காரியம் ஆற்றலாம் என்று எழுதிவிடலாம் என்று பென்சிலில் எழுத வேண்டிய அவசியம் என்ன…

ரூ387 கோடி..ரூ525 கோடியானது எப்படி..ரூ138கோடி எங்கே போனது… 15,000 கிமீட்டர் நீர் வழிப்பாதை  எந்தந்த மாவட்டத்தில் எந்தந்த  ஊராட்சி ஒன்றியத்தில் எந்தந்த கிராமங்களில் அமைக்கப்பட்டது என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பதில் சொல்லுவார்களா..

 15,000 கிமீட்டர் நீர் வழிப்பாதை அமைக்கவில்லை என்று ஆதாரங்களை வெளியிடுவோம்…

 

                      

 

 

Comments

comments