ஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா?

ஊரக வளர்ச்சித்துறையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY), MGNREGS, ANGAVADI ICDS WORKS, MGNREGS VPSC WORKS, TNRRISS உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் இரும்பு கம்பி கொள்முதல் செய்யப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநர் அலுவலகம் இரும்பு கம்பி கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யாத காரணத்தால், இரும்பு கம்பி கொள்முதல் விலையில் ஊழல் நடந்துள்ளது.

 உதாரணமாக

  1. மதுரையில் இரும்பு கம்பி 8 மிமீட்டர் முதல் 32மிமீ வரை 2016-17ல்   ஒரு டன் ரூ39,490க்கும், 2017-18ல் ஒரு டன் ரூ50,400க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  2. வட்டார வளர்ச்சி அலுவலகம் காங்கயத்தில் 2016-17, 2017-18ல் ஒரு டன் இரும்பு கம்பி ரூ38,000க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  3. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இராமநாதபுரத்தில் 2016-17ல் ஒரு டன் ரூ32,431க்கும், 2017-18ல் ஒரு டன் ரூ50,626க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  4. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திருப்புல்லாணியில் 2016-17, 2017-18ல் ஒரு டன் 36,000 முதல் ரூ37,514 வரை இரும்பு கம்பியின் கனத்தை கணக்கீட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  5. கோவையில் கண்ணப்பன் ஸ்டீல் கம்பெனி டெண்டரில் குறிப்பிட்ட விலை ரூ52,606. விலை குறைப்பு பெயரில் 15.11.17ல் ஒரு டன் ரூ51,607 அடுத்த நாள் 16.11.17ல் ஒரு டன் ரூ50,475/-

இப்படி மாநிலம் முழுவதும் இரும்பு கம்பி கொள்முதலில் ஊழல் நடந்திருக்கிறது. இன்னும் பல ஆதாரங்கள் மக்கள்செய்திமையத்திடம் உள்ளது.

  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விரிவான விசாரணை நடத்துமா?

   இரும்பு கம்பி கொள்முதலில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம் 2014-15 முதல் 2016-17ல் வரை ஊழல் வெள்ளை அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளது..

Comments

comments