ஊரக வளர்ச்சித்துறையில்- PMGSY திட்டத்தில் மெகா முறைகேடு

உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரகத்தின் கீழ் 12,600 கிராம பஞ்சாய்த்துக்கள் செயல்படுகிறது. 500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் சாலை வசதியை மேம்படுத்த PRADHAN MANTRI GRAM SADAK YOJANA(PMGSY) திட்டம் பேஸ் -8, Bharar Nirman Phase -111 ன்கீழ் 2012-13ல் ரூ1130.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கிராமங்களில் போடப்பட்ட, மேம்படுத்தப்பட்ட சாலைகளை பராமரிக்க ஐந்தாண்டுகளுக்கு ரூ66.84கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 ரூ1130.10 கோடிக்கு 12,600 கிராம பஞ்சாய்த்துக்களில் பல கிராம பஞ்சாய்த்துக்களில் சாலையே போடாமல், பி.டி.ஒ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் போலி பில், போலி எம்.புத்தகம் மூலம் பணத்தை, தங்கள் பையில் போட்டுக்கொண்டார்கள்..

 2016-17ம் ஆண்டு பராமரிப்பு செலவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ8.345கோடியில் 1544 பணிகள் மூலம் 3048.448 கிமீட்டர் சாலையை பராமரிப்பு பணிகள் மேற்க்கொண்டதாக போலி எம்.புத்தக, போலி பில் மூலம் முறைகேடு நடந்துள்ளது. உண்மையில் ரூ1000கூட பராமரிப்பு பணி மேற்க்கொள்ளவில்லை..

 ஐந்தாண்டுகளில் பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ66.84கோடியும் பராமரிப்பு பணி செய்யாமல், போலியாக பில் போட்டு எடுத்துள்ளார்கள்.. போட்டோவை பாருங்கள் சாலையின் உண்மை நிலை தெரியும்..

 PRADHAN MANTRI GRAM SADAK YOJANA(PMGSY) திட்டம் பேஸ் -8, Bharar Nirman Phase -111 ன்கீழ் 2012-13ல் ரூ1130.10 கோடி, பராமரிப்பு செலவு ரூ66.84கோடி முறைகேடுகள் தொடர்பாக  மக்கள்செய்திமையம், ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறைக்கும் புகார் அனுப்பி உள்ளது.

 தமிழகத்தை சேர்ந்தஅமைச்சர் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 31 மாவட்டங்களில் உள்ள பி.டி.ஒக்கள் இந்த ஊழலில் சிக்கி உள்ளதால் மக்கள்செய்திமையம் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தெரியவில்லை..

 

     

 

 

Comments

comments