ஊரக வளர்ச்சித்துறையா-ஊழல் வளர்ச்சித்துறையா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2017-18ல் கிராம பஞ்சாய்த்துக்களில் உள்ள  குளம், குட்டை, ஊரணி, ஏரிகளுக்கு நீர்  செல்லும் 15,000 கிமீட்டர்  நீர் வழிப்பாதையை ரூ525கோடியில் பராமரிப்பு மற்றும் புதிய பாதைகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டுவிட்டதா கோப்புகளில் உள்ளது. ஒரு கிமீட்டர் நீர் வழிப்பாதைகள் கூட பராமரிக்கப்படவில்லை.. புனரமைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை…

கடந்த மூன்றாண்டுகளில் 2016ம் ஆண்டு வரை 45,094கிமீட்டர் நீர் வழிப்பாதைகளை ஒரு கிமீட்டருக்கு ரூ2.55 இலட்சம் என பராமரிப்பு பணி மேற்க்கொண்டதாக கோப்புகளில் உள்ளது.

60,000 கிமீட்டர் நீர் வழிப்பாதைகள் பராமரிப்பு பணி மேற்க்கொண்டு இருந்தால், கடைமடை பகுதிக்கு மேட்டூர் நீர் அணை நீர் போய் சேர்ந்திருக்கும்..காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி,குளம்,குட்டை, ஊரணிகளில் ஒரு சொட்டு நீர் கூட  இல்லையே..31 மாவட்டங்களில் கிராம பஞ்சாய்த்துக்களில் உள்ள ஏரி, குளம், குட்டை, ஊரணியில் நீர் இருப்பு அளவை வெளியிடத்தயாரா?

பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில்4X3 அளவில் ரூ4500 செலவில் 10,000 போர்டுகள் 2017-18ல் வைக்கப்பட்டுள்ளதாக கோப்புகளில் உள்ளது..

ஊழல் ஆவணங்கள் இதோ… ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளே பதில் சொல்லுங்கள்…

 

 

Comments

comments