உள்ளாட்சி அமைப்புகளில்… மின் கட்டண பாக்கி ரூ500கோடி….

வேலூரில் – ரூ6 கோடி- ராசிபுரத்தில்  – ரூ.1.80 கோடி…

   உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாய்த்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு துறைகளில் மின் கட்டணப்பாக்கி பல கோடி இருப்பதாகவும், இதை செலுத்த பல முறை நோட்டீஸ் அனுப்பியும் மின் கட்டண பாக்கியை செலுத்தவில்லை என்று தமிழ்நாடு மின்சாரவாரியம் கூறியுள்ளது…

 தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் வேலூர் மாவட்டம் காட்பாடி கோட்டத்தில் மின் கட்டண பாக்கி பட்டியலை பாருங்கள்…

 மாநகராட்சிகள் – ரூ1.34கோடி, நகரப் பஞ்சாய்த்துகள் – ரூ1.44இலட்சம், கிராமப் பஞ்சாய்த்துக்கள் – ரூ3.96கோடி, மாநில அரசு துறைகள்ரூ – 5.86இலட்சம், மத்திய அரசு- ரூ1.18இலட்சம், தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியம்- ரூ65.89 இலட்சம் ஆக மொத்தம் ரூ6.05 கோடி… வேலூர் மாவட்ட மற்ற கோட்டங்களின் மின் கட்டணப்பாக்கி ரூ25கோடியை தாண்டும்…

     ராசிபுரம் கோட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டணப்பாக்கி – ரூ43.99 இலட்சம்,  மாநில அரசு துறைகள்  மின் கட்டண பாக்கி – ரூ1.36 கோடி..

  ஆனால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் மின் கட்டணப்பாக்கி ஒரு நாள் தாமதமானாலும் பீஸ் புடுங்கிவிடுவார்கள்.. அடுத்த நாள் ரூ60/- அபராதத்துடன் கட்ட வேண்டும்..

                      ஏழைகளுக்கு மட்டும்தானா சட்டம்….

Comments

comments