உள்ளாட்சித் தேர்தல் மாநகராட்சிகள்- நகராட்சிகள்- பேரூராட்சிகள் – ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த/நடக்கும் ஊழல்களை ரூ30க்கு புத்தகமாக-CORRUPTION BOOK FOR LOCAL ADMINISTRATION DEPT

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதால், 122 நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகளில் நடந்த/நடக்கும் ஊழல்களை  தனித் தனியாக ஊழல் புத்தகம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது..

   முதல் கட்டமாக தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, திருத்தணி, திருவள்ளூர், புதுக்கோட்டை, தேனி அல்லி நகரம், பண்ரூட்டி, நெல்லிக்குப்பம், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய நகராட்சிகளில் நடந்தபொறியியல் பிரிவு, சுகாதாரப்பிரிவில் நடந்த/நடக்கும்  ஊழல்கள் மற்றும் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கட்டிடங்களுக்கு கொடுக்கப்பட்ட அப்ரூவல் உள்ளிட்ட அனைத்து ஊழல்களும் ஒவ்வொரு நகராட்சி வாரியாக புத்தகமாக வெளியிட முடிவு செய்து, அதற்கான பணிகள் நடந்துக்கொண்டு இருக்கிறது.

  உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அடித்தட்டு மக்களுக்கான தேர்தல் என்பதாலும், ஊழல்கள் அடித்தட்டு மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதாலும் மலிவு விலை பதிப்பாக வெளிடுகிறோம்.

   2011 ஆம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த ஊழல்களை நகராட்சி வாரியாக ஆதாரங்கள், ஆவணங்களுடன் ரூ30க்கு வெளியிடுகிறோம்..

        வாக்களிக்கும் மக்கள், வாக்குசாவடிக்கு போகும் முன்பு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு வாக்கு அளிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்…

Comments

comments

About admin

Check Also

FIR

மாஜி ஊழல் அமைச்சர் திரு.S.P.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறையால் FIR போடப்பட்டுள்ளது. Comments comments

Leave a Reply

Your email address will not be published.