உமா சஸ்பெண்ட் -கவிதா கைது -சஸ்பெண்ட்- சுதாதேவி ஐ.ஏ.எஸ் ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை..

அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழலில் சிக்கிய தேர்வு கட்டுப்பாடு அதிகாரி உமா மீது விஜிலென்ஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால், உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

  இந்து அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா மீது காஞ்சிபுரம் ஏகாம்பரம்நாதர் திருக்கோயில் குருக்கள் வாக்குமூலத்தின் பேரில், கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..

  தமிழக அரசின் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்த கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் அலுவலகங்கள், வீடுகளில் ஐந்து நாட்கள் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. குமாரசாமியின் உறவினரும் நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநருமான சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. கோடிக்கணக்கில் பணம், டாலர் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. ஆனால் சுதாதேவி ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.

 சுதாதேவி ஐ.ஏ.எஸ், இமாச்சலபிரதேச கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. குமாரசாமியின் பின்னணியில் தமிழக அரசுக்கு அயல் பணியில் வந்து, அதிகாரமையத்தில் வலம் வருகிறார்..

 சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்துள்ளது, அதனால் சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று இமாச்சலபிரதேச தலைமைச் செயலாளருக்கு 9.7.18ல் மக்கள்செய்திமையம் கடிதம் எழுதியது.

 சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து 48மணி நேரத்தில் தமிழக அரசு மத்திய அரசின் பர்சனல் துறைக்கும், இமாச்சல பிரதேச அரசுக்கு தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறையும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியதாக தெரியவில்லை..

 இமாச்சலபிரதேச அரசு மக்கள்செய்திமையத்தின் கடிதம் அடிப்படையில் 24.7.18ல் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் இந்த கடிதத்துக்கு தமிழக அரசு பதில் அனுப்பாத காரணத்தால், இன்று வரை சுதாதேவி ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. இமாச்சலபிரதேச கடிதத்தில் சுதாதேவி நடவடிக்கை எடுத்துவிட்டு, தகவல் தெரிவித்தால் போது என்று கூறியுள்ளது.  தமிழக அரசுக்கு  சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை சஸ்பெண்ட் செய்யும் எண்ணத்தில் இல்லை. வழக்கம் போல் நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநராக அதிகாரமையத்தில் வலம் வருகிறார்..எப்படி..இந்த கேள்விக்கு பதில் நமக்கு கிடைக்கவில்லை.

              தமிழ்நாட்டில் என்னமோநடக்குது… ஒண்ணுமே புரியவில்லை…

 

 

Comments

comments