ஈரோடு – பெருந்துறை- கிராவல் மண் லாரி விடுவிப்பு.. பின்னணி மிரட்டல் கதை…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா புங்கம்பாடியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த லாரியை பரிசோதனை செய்த போது, லாரியின் ஆவணங்கள் அனைத்தும் போலியாக இருந்தது.. அதனால் பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் லாரி பறிமுதல் செய்து 27.7.18 அன்று நிறுத்தி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பிரபாகர் லாரி மீது வழக்கு போடும்படி உத்தரவிட்டார். ஆனால் பெருந்துறை தாசில்தார்  வீரலட்சுமி பறிமுதல் செய்யப்பட்ட  எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை. பாவம் தாசில்தாருக்கு அரசியல்வாதிகள் மீது மிகுந்த மரியாதையா.. பயமா என்று தெரியவில்லை..

 கிராவல் மண் குவாரி அதிமுக ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் நடத்துகிறார். அந்த குவாரியிலிருந்து கிராவல் மண் ஏற்றி வந்த லாரி திமுக பிரமுகர் ரமேஷ்க்கு சொந்தமானது. பெருந்துறையில் கனிம வளங்கள் கடத்துவது தினமும் நடக்கும். பத்திரிகையில் செய்தி வந்தால், அந்த பத்திரிகை நிருபர் மீது  காவல் நிலையத்தில் பொய் வழக்கு மிரட்டி பணிய வைப்பார்கள். அதனால் ஒருவரும் செய்தி போடவில்லை..

 ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றப்பட்டவுடன், 30.8.18 அன்று தாசில்தார் வீரலட்சுமி பறிமுதல் செய்யப்பட்ட லாரியை விடுவித்துவிட்டார்…திமுக, அதிமுக கூட்டணியில் விடுவிக்கப்பட்ட லாரி என்பதால் நிருபர்களுக்கு பொய் வழக்கு போடுவார்கள் என்று பயம் என்பதால் செய்தி வெளியிடவில்லை.

 ஈரோடு மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையில் கட்சி பேதம் கிடையாது..அனைத்து கட்சியினரும் ஒன்றாக இணைந்து கனிம வளங்களை சுரண்டுவார்கள்.. கனிம வளங்கள் கொள்ளை செய்தி வெளியிட்டால், அந்த நிருபரை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைப்பார்கள்..

  தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை கனிம வள கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளதா… தாசில்தார்கள் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்…ஒண்ணுமே புரியவில்லை..

 

Comments

comments