ஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்தில் 4.4.19ல் கொள்ளையடிக்கப்பட்ட ரூ30 இலட்சத்துக்கு 3.5.19ல் புகார் பெறப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு(247/19)செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை டி.எஸ்.பி ராஜ்குமார் சொகுசு காரில் குற்றவாளியை தேடுகிறார். நமக்கு எழுந்துள்ள சந்தேகங்கள்…கேள்விகளாக…

  1. கோவையில் உள்ள சிட்டி கோல்ட் உரிமையாளர் அன்னவர் சதர்த் டிரைவர்  3.4.19ல் சென்னை பாரிமுனையிலிருந்து ரூ30 இலட்சத்தை KA 05 MR 0398 ரொனால்ட் டஸ்டர் காரில் கேரளா மலப்புரம் கொண்டு செல்லும் போது, பெருந்துறை காவல் நிலையத்துக்குட்பட்ட விஜயமங்கலம் டோல்கேட்டில் கொள்ளையடிக்கப்பட்டதாக 29 நாட்கள் கழித்து அதாவது 3.5.19ல் புகார் கொடுக்கிறார் அன்னவர் சதர்த். மக்களவைத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது, 4.4.19ல் காரில் கொண்டு சென்ற பணம்  கொள்ளையடிக்கப்பட்டதாக ரூ30 இலட்சத்துக்கு எப்படி முதல் தகவல் அறிக்கை எப்படி பதிவு செய்ய முடியும்?
  2. மக்களவைத் தேர்தல் நேரத்தில் பறக்கும்படை அதிகாரிகளிடம் சிக்காமல் பாரிமுனையிலிருந்து விஜயமங்கள் டோல்கேட் வரை சுமார் 450 கிமீட்டர் எப்படி ரூ30 இலட்சத்தை கொண்டு செல்ல முடிந்தது.
  3. 3.5.19ல் பெருந்துறை காவல் நிலையத்தில் அன்னவர் சதர்த் ரூ30 இலட்சம், 4.4.19ல் கொள்ளையடிக்கப்பட்டது என்று புகார் கொடுத்ததும், பெருந்துறை காவல் நிலைய அதிகாரிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித்தலைவருமான  கதிரவன் ஐ.ஏ.எஸ்க்கும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஏன் தெரிவிக்கவில்லை.
  4. சம்பவம் நடந்து 29 நாட்கள் கழித்து பெறப்பட்ட  புகாருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அன்னவர் சதர்த்தின் சொகுசு காரில் டி.எஸ்.பி ராஜ்குமார் குற்றவாளிகளை தேடி கேரளவுக்கும், பெருந்துறைக்கு பயணம் செய்வது சரியா..

                                                                                       கேள்விகள் தொடரும்..

Comments

comments