இலங்கை அகதிகள் உதவித் தொகை -தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியம்-மத்திய அரசு மறுப்பு

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, திமுக ஆட்சியில் மாத ரூ750 உதவித் தொகை வழங்கப்பட்டது. 2011 அதிமுக ஆட்சியில் உதவித் தொகை ரூ1000/- உயர்த்தப்பட்டது.

இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையை, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொடுத்துவிடும். தமிழக அரசின் மறுவாழ்வு இயக்குநரகம் ஒவ்வொரு ஆண்டும் உதவித் தொகை செலவிடப்படும் தொகை, தணிக்கை அறிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழில் பெற்று, அதை மத்திய அரசுக்கு அனுப்பினால், உதவித் தொகைக்கான   மானியமாக மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பிவிடும்.

 2011ம் ஆண்டிலிருந்து தமிழக அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கு, இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டதால், உதவி தொகைக்கான  தணிக்கை அறிக்கை சான்றிதழ் வாங்கி  மத்திய அரசுக்கு அனுப்பாத காரணத்தால், உதவி தொகைக்கான மானியம் மத்திய அரசிடமிருந்து வரவில்லை.

 இதைவிட வேதனை என்னவென்றால் உதவித் தொகை ரூ450 கொடுக்கும் போது, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தமிழக அரசு, ரூ750 உயர்த்தப்பட்டு, பிறகு ரூ1000/-மாக உயர்த்தப்பட்டப் பிறகு, உதவித் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் அதிகாரிகள் கடிதம் அனுப்பவில்லை. அதனால் மத்திய அரசின் கோப்புகளில் ரூ450/- மட்டுமே உதவித் தொகை கொடுப்பதாக உள்ளது.

 மறுவாழ்வுத்துறை இயக்குநராக உமாநாத் ஐ.ஏ.எஸ் பணியாற்றிய போது, தணிக்கை அறிக்கை சான்றிதழ்களை 2011லிருந்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் மத்திய அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய அரசின் உதவி இல்லாமல், இலங்கை அகதிகளுக்கு உதவித் தொகை எப்படி கொடுத்தீர்களே அதே போல், உதவித் தொகை  கொடுங்கள் என்று கூறி, உதவித் தொகை மானியம் கொடுக்க மறுத்துவிட்டது..

 தமிழக அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், இலங்கை அகதிகளுக்கான உதவித் தொகை சுமார் ரூ400கோடி மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை..

 ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது, கருத்தரங்கம் நடத்துவதுதான் வேடிக்கையாக உள்ளது..

 

Comments

comments