இந்திய அரசியலமைப்பு சட்டம் அவமதிப்பு – மாண்புமிகு முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு திட்டமிட்டு செய்த அவமரியாதை…

????????????????????????????????????

img_00-168

(இந்த அறிக்கை எந்த உள்நோக்கத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது அல்ல. அதிமுக தொண்டர்களும், இந்திய அரசியலமைப்பு சட்டமும் எப்படி அவமதிக்கப்பட்டுள்ளதுன்பதை தமிழக மக்களுக்கு தெரியபடுத்தவே வெளியிட்டுள்ளோம்)        

     தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி.ஜெயலலிதா அவர்கள் 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5.12.16ம் தேதி இரவு 11.30மணி காலமானார். மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு மத்திய, மாநில அரசு கள் மற்றும் இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதில் நமக்கு கருத்து வேறுபாடு கிடையாது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதில்  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்  நடைமுறைகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது அதாவது முற்றிலும் மீறப்பட்டுள்ளது.

????????????????????????????????????

img_00-57

 1969 பிப்ரவரி மாதம் 3ம் தேதி முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா காலமானார், உடனடியாக அமைச்சர் நெஞ்செழியன் பொறுப்பு முதல்வராக பதவியேற்றார். அறிஞர் அண்ணா அமைச்சரவை கலைக்கப்படவில்லை. 10.2.1969ல் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது,  அதில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.  10.2.1969 அன்று  முதல்வராக இருந்த  அறிஞர் அண்ணா மறைவுக்கு பின் பொறுப்பு முதல்வர் நெஞ்செழியன் தலைமையில் செயல்பட்ட அண்ணாவின் அமைச்சரவை கலைக்கப்பட்டு, கருணாநிதியை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் அழைத்தார். பிறகு முறைப்படி கருணாநிதி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

 24.12.1987ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் காலமானார். உடனடியாக நிதியமைச்சர் நெஞ்செழியன் பொறுப்பு முதல்வராக பதவியேற்றார். எம்.ஜி.ஆர் அமைச்சரவை கலைக்கப்படவில்லை. 7.1.1988 அன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது, அதில் ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 7.1.1988 அன்று  முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்  பொறுப்பு முதல்வர் நெஞ்செழியன் தலைமையில் செயல்பட்ட எம்.ஜி.ஆர் அமைச்சரவை கலைக்கப்பட்டு, ஜானகி ராமச்சந்திரனை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் அழைத்தார். பிறகு முறைப்படி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது.

 இதனால் தான் முதல்வராக இருந்த  அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன்  ஆகிய இருவருக்கும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

????????????????????????????????????

????????????????????????????????????

 தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு செல்வி.ஜெயலலிதா அவர்கள், 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  5.12.16ம் தேதி இரவு 11.30மணிக்கு(அப்பல்லோ மருத்துவமனை செய்திக்குறிப்பு – ஆனால் பிரதமர் மோடி அவர்கள்  தன்னுடைய பேஸ் புத்தகம் 11.09மணிக்கு தமிழக முதல்வர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவிட்டார்). காலமானார். முதல்வர் சிகிச்சை பெறுவதால் முதல்வரின் இலாகாக்களை கவனிக்கும்(11.10.16ஆளுநர் அறிவிப்பு) நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உடனடியாக பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இரவு 11.30 மணி முதல் இரவு 11.59க்குள்  அதாவது 29 நிமிடங்களுக்குள் மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அமைச்சரவை கலைக்கப்பட்டு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று, ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இரவு 11.55 மணிக்கு ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றவிட்டது.  புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான அரசாணைகள் இரவு 11.55க்குள் வெளியிடப்பட்டுவிட்டது. இதை பார்க்கும் போது மறைந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் முன்னாள் முதல்வராக்கப்பட்டுவிட்டார், அதிமுக பொதுச் செயலாளராகவே மட்டுமே நீடிக்கிறார்.

jaya_20160702_350_630

இந் நிலையில் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் எப்படி செய்ய முடியும்?

  முதல்வர் மாண்புமிகு செல்வி.ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அமைச்சரவை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் கலைக்கப்படாமல், பொறுப்பு முதல்வராக ஒ.பன்னீர்செல்வத்துடன் தமிழக அமைச்சரவை செயல்பட்டால், மறைந்த முதல்வர் செல்வி.ஜெயல்லிதா அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள்  மற்றும் இராணுவ மரியாதையுடன் நல்லட்டக்கம் நடைபெறலாம்.

 முன்னாள் முதல்வருக்கு அதாவது அதிமுக பொதுச் செயலாளர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் உடல்   மத்திய, மாநில அரசுகள் மற்றும் இராணுவ மரியாதையுடன்  நல்லட்டக்கம் செய்தது,  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை  அவமதிப்பதாகும்.

4PTI5_16_2011_000148B_112599

  உண்மையில் 5.12.16ம் தேதி மாலை 5மணியளவில் மாண்புமிகு முதல்வர் செல்வி.ஜெயலலிதா  அவர்கள் காலமாகிவிட்டார் என்று  ஊடகங்கள் செய்திவெளியான நிலையில் அப்பல்லோ மருத்துவமனை மறுப்பு தெரிவித்தது. மாலை ஆறுமணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்  முதல்வராக ஒ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்வதா, எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்வதா என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வெளியிடப்படவில்லை.  மத்தியமைச்சர் வெங்கய்யா நாயுடு செய்த பஞ்சாய்த்தில் அடிப்படையில் இரவு 11.30மணி முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் காலமானதாக அறிவிக்கப்பட்டவுடன்,  முதல்வர் செல்வி. ஜெயலலிதா தலைமையில்  செயல்பட்ட அமைச்சரவை கலைக்கப்பட்டுவிட்டது. இரவு11.55க்குள் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றவிட்டது.

 அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து, போயஸ்கார்டனுக்கு  முதல்வர் செல்வி. ஜெயலலிதா உடலாக கொண்டு வரப்படவில்லை, முன்னாள் முதல்வராக செல்வி. ஜெயலலிதா உடலாகதான் கொண்டு வரப்பட்டுள்ளது. இது செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு திட்டமிட்டு  செய்த அவமரியாதையாகும். செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு திட்டமிட்ட செய்த அவமரியாதையில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் அவர்களுக்கும், தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்க்கும் முழு பங்கு உண்டு.

 அதிமுக தொண்டர்களை ஏமாற்றியதோடு இல்லாமல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்துள்ளார்கள்.. இனி தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கும் ஆட்சித்தான் நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

makkalseithimaiyam 7.12.16 10pm

 

Comments

comments