ஆவின்..ஆவின்..ஆவின்-Traffic supervisor நியமன முறைகேடு -மதியழகன் பெற்ற இலஞ்சம்

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும், கிரானைட் ஊழல் புகழ் காமராஜ் ஐ.ஏ.எஸ்யும் கூட்டணி அமைத்து, பணி நியமனத்தை விலை பேசி விற்று வருகிறார்கள்..

 மார்ச் 2017 முதல் தற்போது வரை காமராஜூக்கு ஆல் இன் ஆல்..தமிழரசுதான்… சேலம் தமிழரசு காமராஜ் ஐ.ஏ.எஸ்க்கே அல்வா கொடுத்து, தன் மருமகள் பி.அனிதாவுக்கு துணை மேலாளர் பிளாண்ட் கெமிஸ்ட் என்ற பணிக்கான உத்தரவை பெற்று, அனிதா பணியில் சேர்ந்துவிட்டார்…

 Traffic supervisor பதவிக்கு நடந்த நேர்முகத் தேர்வில் காஞ்சிபுரத்தை சேர்ந்த முத்துக்குமரன், தான் டிகிரி படித்த சான்றிதழை காட்டவே இல்லை..சான்றிதழின் நகல் கூட முத்துக்குமரனிடம் இல்லை.

 சான்றிதழ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்துவிட்டதால், நேர்முகத் தேர்வில் முத்துக்குமரனுக்கு 58 மதிப்பெண்கள் போட்டு, தேர்வு செய்துவிட்டார்கள்.. நியமன ஆணை அனுப்பிவிட்டார்கள்..

முத்துகுமரனின் டிகிரி படித்த சான்றிதழ் நகல் கூட இல்லாமல்,  முத்துகுமரன் என்ன படித்தார், அவருக்கு என்ன தகுதி இருக்கிறது  எப்படி ஆவின் பணி நியமன தேர்வுக்குழு எப்படி முடிவு செய்தது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

 Traffic supervisor நியமனம் முழுவதுமே முறைகேடுதான்.. பாலாஜி என்பவருக்கு தகுதி இருந்தும் இலஞ்சம் கொடுக்க முடியாத காரணத்தால், தேர்வு செய்யப்படவில்லை..

  Traffic supervisor பணி நியமனம் மற்றும் தகுதி இல்லாத, சான்றிதழ் இல்லாத காஞ்சிபுரம் முத்துக்குமரன் நியமனம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு மக்கள்செய்திமையம் புகார் அனுப்பி உள்ளது..

காமராஜ் ஐ.ஏ.எஸ் பெயரை சொல்லி, பொது மேலாளர் மதியழகன் முத்துகுமரனிடம் பல லட்சம் இலஞ்சம் வாங்கியுள்ளார்..

 

 

 

 

 

Comments

comments