ஆவின்..ஆவின்..ஆவின் – காமராஜ் ஐ.ஏ.எஸ்யின் ஊழல் ராஜ்ஜியம்

ஆவின் நிர்வாக இயக்குநராக, மதுரை கிரானைட் ஊழல் புகழ் காமராஜ் ஐ.ஏ.எஸ்  மார்ச் 2017 பதவியேற்றார்.  ஆவினில் உள்ள senior factory asst, Technician, Junior Executive, Driver இப்படி 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் ஏலம் முறையில் நிரப்பப்படுகிறது.

 காமராஜ் ஐ.ஏ.எஸ்யின்  ஏலம் முறையை பார்க்கும் போது, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறையில் ஜெயிலர், ஜெயில் சூப்ரடெண்டு பதவிகள் எல்.ஐ.சி எதிரே உள்ள சிறைத்துறை அலுவலகத்தில்  ஏலம் விடப்படும். ஏலத்தொகை அதிக கேட்பவர்களுக்கு, அந்தந்த மத்திய சிறை ஒதுக்கப்படும். சிறைத்துறை ஏலம்தான் நினைவுக்கு வருகிறது..

 சேலம் ஆவினில் பணியாற்றி ஒய்வு பெற்ற தமிழரசுதான், நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ்யின் புரோக்கர்…காமராஜ் , ஆவினில் பொது மேலாளராக பணியாற்றிய போதே, சேலம் தமிழரசு நெருக்கம்..

 மார்ச் 2017 முதல் தற்போது வரை காமராஜூக்கு ஆல் இன் ஆல்..தமிழரசுதான்… சேலம் தமிழரசு காமராஜ் ஐ.ஏ.எஸ்க்கே அல்வா கொடுத்துவிட்ட கதையே கேளுங்கள்.. தமிழரசுவின் மருமகள் பி.அனிதாவுக்கு துணை மேலாளர் பிளாண்ட் கெமிஸ்ட் என்ற பணிக்கான உத்தரவை பெற்று, அனிதா பணியில் சேர்ந்துவிட்டார்…

 பணியில் சேர்ந்த பிறகுதான்  கிரானைட் ஊழல் புகழ் காமராஜ் ஐ.ஏ.எஸ்க்கு அனிதா சேலம் தமிழரசின் மருமகள் என்று தெரியுமாம்..

 வழக்கம் போல், பணிக்கான ஏலத்தொகையை கேட்டு வாங்கிவிட்டாராம்..

   ஆவினில் காலி இடங்கள் முறைகேடாக, விதிமுறைகளை மீறி நிரப்பப்படுவது தொடர்பாக மக்கள்செய்திமையம் புகார் கொடுத்துள்ளது..

                                   ஆவின்…ஆவின்…ஆவின்…

  

Comments

comments