ஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..

கிரானைட் ஊழல் புகழ் காமராஜ் ஐ.ஏ.எஸ்யும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூட்டணி அமைத்து, ஆவின் நிறுவனத்தை மொட்டையடித்து வருகிறார்கள்..

 சேலம் புரோக்கர்  தமிழரசுவின் மருமகள் பி.அனிதாவுக்கு துணை மேலாளர் பிளாண்ட் கெமிஸ்ட் நியமன ஊழல் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் மாமூல் தகராறில் இரண்டு அதிகாரிகளை மாற்றிய ஊழல் அரங்கேறியுள்ளது.

 ஆவினில் ஆல் இன் ஆல் பொறியாளர் ரவிக்குமார், கொள்முதல் மேலாளர் செல்வம் இருவரும் தான் ஆவின் ஊழலில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்..ரவிக்குமார், செல்வம் இருவரும் மாமூல் ஒழுங்காக தரவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரை திருநெல்வேலிக்கும், செல்வத்தை விழுப்புரத்துக்கும் மாற்றப்பட்டார்கள்..

 ரவிக்குமார் ராஜேந்திர பாலாஜி சந்தித்தார். மாமூல் கணக்கு வழக்கை பார்க்கலாம் என்றார்.. நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ் வரவழைக்கப்பட்டார்.. 8மணி நேரம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலுவலகத்தில் மாமூல் கணக்கு வழக்கு பார்க்கப்பட்டது. மாமூல் பாக்கியை ரவிக்குமார் உடனடியாக செலுத்திவிட்டார். அதனால் 3.10.18ம் தேதி திருநெல்வேலிக்கு மாற்றப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டது.. சென்னையில் மீண்டும் மாமூல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் ஆல் இன் ஆல் ரவிக்குமார்..

 ஆல் இன் ஆல் ரவிக்குமார், கோவையிலிருந்து  மாறுதல் பெற்று சென்னைக்கு வந்து 18 மாதங்களில் அமைச்சர் அலுவலகத்தில் கட்ட பஞ்சாய்த்து நடத்தும் நிலைக்கு உயர்ந்துவிட்டாரே என்று சில அதிகாரிகள் புலம்புகிறார்கள்..

 செல்வம் மாமூல் கணக்கு வழக்கை முடிக்காத காரணத்தால் விழுப்புரம் ஆவினில் பணியை தொடருகிறார்.  மாமூல் கணக்கை முடிக்கும்படி  செல்வம் தொடர்ந்து மிரட்டுப்பட்டு வருகிறார்.

  மாமூல் சரியாக தராத அதிகாரிகளை மாற்றுவதும், பின்னர் மாற்றல் உத்தரவு ரத்து செய்வது ஆவினில் வாடிக்கையாகிவிட்டது..

 அமைச்சர் சம்பத், வள்ளலார் ஐ.ஏ.எஸ் கூட்டணி  ஊழலால், டாமின் மூடப்படும் நிலையில் உள்ளது போல், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காமராஜ் ஐ.ஏ.எஸ் கூட்டணி ஊழலால் ஆவினுக்கு மூடு விழா நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை…

 

Comments

comments