ஆவடி பெரு நகராட்சி- ராஜேந்திரன் இலஞ்சம் வாங்கும் போட்டோ..

ஆவடி பெரு நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், சப் –டிவிசன்,  லே அவுட் , கோயில் பதாகை பெருமாள் கோயில் நிலத்தின் ஆக்ரமிப்பாளர்களுக்கு லே அவுட் அப்ரூவல்  என்று சி.எம்.டி.ஏ  விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக பல லட்சம்  இலஞ்சம் வாங்கிக்கொண்டு கொடுத்துள்ளார்..

 இது தொடர்பாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து, பல அப்ரூவல் கோப்புகளை கைப்பற்றினார்கள். அந்த அப்ரூவல்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.

  ஆனாலும் இலஞ்சம் வாங்குவதை ராஜேந்திரன் நிறுத்தவில்லை. சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கு, விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு மாத மாமூல் கொடுக்க இலஞ்சம் வாங்குவதாக வெளிப்படையாக புலம்பி வருகிறார்..

 27.11.18 ம்தேதி காலை10மணியிலிருந்து கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அழைத்து, மாமூல் வாங்கி வந்தார் ராஜேந்திரன். இலஞ்சம் வாங்கிய பணத்தை தன்னுடன் இருக்கும் ஒருவரை(மஞ்சள் சட்டை போட்டவர்) அலுவலகம் வரவழைத்தார். அந்த நபர் வந்தவுடன், மேஜை டிராயரில் இருந்த இலஞ்சம் பணத்தை எடுத்து(மஞ்சள் சட்டை போட்டவரிடம் – புளு பையை ) கொடுக்கும் காட்சியை போட்டோ எடுத்தோம்…

ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் என்னை ஒண்ணும் பண்ணமுடியாது. பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார் என்னை காப்பாற்றிவிடுவார் என்று அலட்சியமாக பேசி வருகிறார்.

 இலஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளில் காஞ்சிபுரம், திருவள்ளூர் நகராட்சிகள், பேரூராட்சிகளில் இலஞ்சம் வாங்குவதை கையும் களவுமாக பிடித்திருக்கிறார்களா…இல்லை.. மாதா, மாதம் இலஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாமூல் வாங்கும் போது எப்படி பிடிக்க முடியும்..

  பள்ளிப்பட்டு பேரூராட்சியில் புகார் கொடுத்தவர், உயரதிகாரிகளிடம் சென்ற காரணத்தால், விஜிலென்ஸ் அதிகாரிகள் பிடித்தார்கள்..

 தாம்பரம், பல்லவரம், ஆவடி, திருவேற்காடு, மறைமலைநகர், பூந்தமல்லி இந்த நகராட்சிகளில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் ஏழு நகரமைப்பு அதிகாரிகள் மட்டும் நகரமைப்பு பிரிவில் உள்ளார்கள்..மனைவி பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் நகரமைப்பு ஆய்வாளர் இன்னும் அதிகாரமையத்தில் வலம் வருகிறார் எப்படி…

 இதெல்லாம் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு தெரியாதா..

 நகரமைப்பு அதிகாரிகளின் இலஞ்சம் பணத்தால் பல விஜிலென்ஸ் அதிகாரிகள், சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துவிட்ட கொடுமைதான் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்து வருகிறது…

  சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இருவருக்கு ரூ100கோடிக்கு 300 ஏக்கர் பண்ணை உள்ளது, விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தெரியாதா…

 

                        

 

Comments

comments