ஆவடி பெரு நகராட்சி-ராஜேந்திரன் & பாலசுப்ரமணியன் ரூ20கோடி வசூல்-டி.டி.வி தினகரன் தான் முதல்வர்…பாலசுப்ரமணியன்..

ஆவடி பெரு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இருந்த ராஜேந்திரன் அப்ரூவல் ஊழலில் சிக்கி, திருவள்ளூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். ராஜேந்திரன் அப்ருவல் தருவதாக ரூ2கோடி வசூல் செய்திருந்தார். திருவள்ளூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டதும், பணம் கொடுத்தவர்களிடம் நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன், டி.டி.வி தினகரனுக்கு நெருக்கமானவர். டி.டி.வி மூலமாகதான் ஆவடிக்கு மாறுதலாகி வந்தார், அவரிடம் உங்கள் அப்ரூவல் கோப்புகள் உள்ளது. அதனால் பாலசுப்ரமணியனை அணுகும்படி ஆடியோவும் வெளியிட்டார் ராஜேந்திரன்..

 பாலசுப்ரமணியன், சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூடுதல் இயக்குநர் செபாஸ்டினின் பினாமி. ஒசூரில் செபாஸ்டின் பண்ணை வீட்டை கட்டிக்கொடுத்து, மேற்பார்வை செய்தது பாலசுப்ரமணியன் தான்.

 ஒசூர் நகராட்சியிலிருந்து  ஆவடி நகராட்சிக்கு சசிகலா அதிமுக பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தஞ்சாவூர் சரவணன் மூலம் டி.டி.வி தினகரனை சந்தித்து, சிபாரிசு பெற்று மாறுதல் பெற்று வந்தார்..

 ஆவடி பெரு நகராட்சியில் அப்ரூவல் வரும் மக்களிடம், அடுத்த முதல்வர் டி.டி.வி தினகரன் தான். டி.டி.வி தினகரன் முதல்வராகிவிட்டால், இவ்வளவு கமிசன் தர வேண்டாம் என்று வெளிப்படையாகவே பேசுவார்..   

 பாலசுப்ரமணியன் நகராட்சி நிர்வாகத்தில் நியமனம் செய்யப்பட்டதே சட்டத்துக்கு புறம்பாக உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது.

 திருத்தணிக்கு மாறுதல் செய்யப்பட்ட ராஜேந்திரன், சில நாட்களுக்கு முன்பு இரவு 7மணிக்கு ஆவடி பெரு நகராட்சி அலுவலகம் வந்தார். பாலசுப்ரமணியன் அலுவலகத்தில் காத்திருந்தார். இருவரும் இரவு 11மணி வரை பல அப்ரூவல் கோப்புகளை திருத்தினார்கள்..

 ராஜேந்திரன்  பெரிய, பெரிய லே அவுட், சப் –டிவிசன்களை மட்டுமே அப்ரூவல் செய்தார்.. சின்ன சின்ன 350 அப்ரூவல் பிளான்களை அலுவலகத்திலிருந்து எடுத்து சென்று ஆவடியில் உள்ள ஒரு வீட்டில் உட்கார்ந்து கொண்டு, பிளான் கொடுத்தவர்களை அழைத்து அப்ரூவல் தருவதாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாலசுப்ரமணியனும், ராஜேந்திரனும் ரூ20கோடி வசூல் செய்துள்ளார்கள்.. 

 கடந்த சில நாட்களாக நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் அலுவலகம்  மதியம் மூன்று மணிக்குதான் வருகிறார்.. ராஜேந்திரனை அழைத்துக்கொண்டு சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தியை சந்தித்து ராஜேந்திரனை காப்பாற்றுங்கள் என்று பாலசுப்ரமணியன் பேரம் பேசி வருகிறார்..

 எடப்பாடி பழனிசாமியிலான ஆட்சியில், டி.டி.வி தினகரனுக்கு பிரச்சாரம் செய்யும் நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் எப்படி ஆவடி பெரு நகராட்சியில் பணியாற்றுகிறார்கள்..

 அமைச்சர் வேலுமணி, டி.டி.வி தினகரனை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

Comments

comments