ஆவடி பெரு நகராட்சி – நகரமைப்பு திட்ட அனுமதியில் முறைகேடு..

ஆவடி பெரு நகராட்சி ஊழலில் சிக்கி, சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தவிக்கும் நகராட்சி. 2015ம் ஆண்டு முதல் நகரமைப்பு ஆய்வாளர்களால்  வீட்டுமனை, குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீட்டுமனை ஆகியவைகளுக்கு வழங்கப்பட்ட திட்ட அனுமதியில் விதிமுறைகள் மீறப்பட்டு, மெகா முறைகேடு நடந்துள்ளது.

 30.6.16 வரை நகரமைப்பு ஆய்வாளரால்128 திட்ட அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோயில் பதகையில் ஆறு வீட்டுமனைகளுக்கு சப் –டிவிசன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

 134 அனுமதிகளிலும் விதிமுறைகள் மீறப்பட்டு, மெகா முறைகேடுகள் நடந்துள்ளது.  உதாரணமாக திட்ட அனுமதி எண்.628,629,630,631, 641, 119 மற்றும் விஜிஎன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிட் திட்ட அனுமதி எண்.124/24.3.2015 உள்ளிட்ட பல திட்ட அனுமதியில் விதிமுறைகள் பின்பற்றப்படாமல், அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. அதனால் 24.3.15 முதல் 30.6.2016 வரை திட்ட அனுமதி அதாவது அப்ரூவல் கொடுக்கப்பட்ட வீடுகள், வீட்டுமனைகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், சப் –டிவிசன் உள்ளிட்ட அனைத்தையும் மீண்டும் ஆய்வு செய்ய புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

  ஆவடி பெரு நகராட்சியில் 30.6.16 வரை வழங்கப்பட்ட 134 திட்ட அனுமதிகளை விஜிலென்ஸ் துறையின் பரிந்துரையின் படி விரைவில் சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் சிறப்பு அமுலாக்கப்பிரிவு ஆய்வு நடத்தும்..

 ஊழல், விதிமுறை மீறல்களில்  ஆவடி பெரு நகராட்சி முதலிடம் வகிக்கிறது…

 

 

         

 

 

Comments

comments