ஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..

தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் மாதா, மாதம் இலட்சக்கணக்கில் போலி பில் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக 10 பெண் ஊழியர்களை நியமித்துவிட்டு, 80 பெண் ஊழியர்களுக்கு பில் போடப்படுகிறது..

 ஆவடி பெரு நகராட்சியில் டெங்கு காய்ச்சலுக்கு ஜனவரி 2017 முதல் செப்டம்பர் 2017 வரை போடப்பட்ட பில் பில்லின் மதிப்பு ரூ73,42,608(ரூ73.42இலட்சம்)..

 1. வவுச்சர் எண்.EJV/012/16-17/RF/0000647 – 21.3.17- ரூ 23,17,140/-
 2. வவுச்சர் எண்.EJV/012/17-18/RF/0000086 – 3.5.17 – ரூ 6,94,512
 3. வவுச்சர் எண்.EJV/012/17-18/RF/0000106 – 24.5.17 – ரூ 4,92,500
 4. வவுச்சர் எண்.EJV/012/17-18/RF/0000145 – 19.6.17 – ரூ9,21,816
 5. வவுச்சர் எண்.EJV/012/17-18/RF/0000271 – 17.8.17 – ரூ11,85,912
 6. வவுச்சர் எண்.EJV/012/17-18/RF/0000300 – 31.8.17 – ரூ 6,94,000
 7. வவுச்சர் எண்.EJV/012/17-18/RF/0000313 – 7.9.17 – ரூ10,36,278

  7 வவுச்சர்களில்  9மாதங்களில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் போடப்பட்ட போலி பில் மதிப்பு ரூ73.42இலட்சம்..

  இதை விட வேடிக்கை என்ன வென்றால்…

 1. 11.5.17ல் பினாயில், பளிச்சிங் பவுடர் வாங்கியது ரூ9.77 இலட்சம்..
 2. 5.6.17ல் கொசு அடிக்கும் இயந்திரத்திற்கு ஏப்ரல் மாதம் டீசல் செலவு – ரூ 2.64 இலட்சம்…
 3. 19.6.17ல் கொசு அடிக்கும் இயந்திரத்திற்கு மே மாதம் டீசல் செலவு – ரூ1.54இலட்சம்..
 4. 1.9.18 ல் கொசு அடிக்கும் இயந்திரத்திற்கு ஜூலை மாதம் டீசல் செலவு – ரூ2.60இலட்சம்
 5. 28.9.17ல் கொசு அடிக்கும் இயந்திரத்திற்கு ஆகஸ்டு மாதம் டீசல் செலவு –ரூ3.39 இலட்சம்
 6. 1.2.17ல் கொசு அடிக்கும் இயந்திரத்திற்கு ஜனவரி மாதம் டீசல் செலவு –ரூ3.65 இலட்சம்
 7. 2.2.17ல் கொசு அடிக்கும் இயந்திரத்திற்கு டிசம்பர் மாதம் டீசல் செலவு –ரூரூ5.97இலட்சம்

 இப்படி டெங்கு கொசு பெயரில் 9மாதங்களில் போடப்பட்ட போலி பில்லின் மதிப்பு ரூ1கோடி..

  இதை தவிர சுகாதாரபிரிவுக்கு செலவு செய்யப்பட்ட தொகை தனி…

 ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை கொசு அடிக்கும் இயந்திரத்திற்கு வேலையே இல்லை.. வெயில் காலத்தில் கொசு எப்படி பரவும்…

  டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பாக போடப்பட்ட போலி தொடர்பாக விஜிலென்ஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது..

  ஆவடி தொகுதி, அமைச்சர் மா.பாண்டியராஜன் தொகுதி.. அமைச்சர் தொகுதியில் இந்த நிலையா…இனி மக்கள்தான் நியாயம் கேட்க வேண்டும்..

 

 

 

 

 

 

 

Comments

comments