ஆவடி பெரு நகராட்சி -சி.ராஜேந்திரன் இலஞ்சம் வாங்கும் வீடு-MCB லே அவுட்டில் முறைகேடா?

ஆவடி பெரு நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக பல இடங்களுக்கு லே அவுட் அப்வரூவல் கொடுப்பதில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கூட்டணி அமைத்து மெகா முறைகேடு நடந்துள்ளது/நடந்து வருகிறது.

 தாம்பரம் நகராட்சியிலிருந்து ஆவடி நகராட்சிக்கு ஆணையருடன் கூட்டணியாக  மாறுதல் பெற்று வந்த சி.ராஜேந்திரன் கோயில் நிலம், மேய்க்கால் புறம்போக்கு, நீர் நிலை புறம்போக்கு, சுடுகாடு உள்ளிட்ட அரசு நிலங்களுக்கு அப்ரூவல் கொடுத்து ஊழல் சாதனை புரிந்துள்ளார்.

 கோயில் பதாகையில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்திற்கு போலி ஆவணங்கள் மூலம் போலி பட்டா பெற்றவர்களுக்கு ஆவணங்களை சரிபார்க்காமல் அப்ருவல் கொடுத்துள்ளார்.

  கோயில் பதாகையில் பெருமாள் கோயில் நிலத்தில்  சி.எம்.டி.ஏ 42/2018 அப்ரூவல் கொடுத்துள்ளது. இந்த அப்ரூவல் கொடுத்ததை ஆய்வு செய்தால், பல அதிகாரிகள் சிக்குவார்கள்.

 இதை தவிர  MCB பெயரில் அப்ரூவல் கொடுக்கப்பட்ட லே அவுட்டில் ஆவடி நகராட்சி ஆணையர், நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் கூட்டணி அமைத்து, சட்டத்துக்கு புறம்பாக விதிகளை மீறி, இலஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்துள்ளார்கள்..

 நகராட்சி அனுமதியில்  8 மனைக்குதான் கொடுக்க முடியும். ஆனால் நகராட்சி அனுமதி பெற்ற லே அவுட்டில் 1-17 வரை A,B,C,D என 26 எழுத்துக்கள் உள்ளது. உதாரணமாக 17A,17B,17C,17D என 26 ஆங்கில எழுத்துக்களில் பிளாட் எண் உள்ளது. இப்படி முறைகேடான, சட்டத்துக்கு புறம்பான அப்ரூவல் லே அவுட் வாங்கி வீடு கட்டியிருக்கிறார்கள். வங்கிகள் கடன் கொடுத்திருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

 ஆவடி வீட்டு வசதிவாரியத்தின் வீட்டில் குடியிருக்கும் நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், வீட்டில் அனைத்து பண பரிமாற்றங்களும் நடக்கிறது. இலஞ்சம் வாங்க பாலசுந்தரம், சுரேஷ் என்ற இரு  லைசென்ஸ் சர்வேயர்களை ராஜேந்திரன் நியமித்துள்ளார்…

 ஆவடி பெரு நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அனைத்து அப்ரூவல்களை ஆய்வு செய்ய, மக்கள்செய்திமையம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது..

 

 

Comments

comments