ஆவடி பெரு நகராட்சி- ஊழல், நிர்வாக சீர்கேட்டால் மூடு விழா..குறட்டைவிடும் சி.எம்.டி.ஏ

ஆவடி பெரு நகராட்சியில்  நகரமைப்பு பிரிவில் நகரமைப்பு ஆய்வாளர் சி.ராஜேந்திரனின் முறைகேடுகளை  சி.எம்.டி.ஏவின் ஊழல் அதிகாரிகளான ரமேஷ் & ரூத்ரமூர்த்தி  ஆய்வு செய்தார்கள்.. லே அவுட்டுகளை சப் டிவிசன் பெயரில் அப்ரூவல் கொடுத்த சில கோப்புகளை  அள்ளி சென்றார்கள்..

 ரமேஷ் & ரூத்ரமூர்த்தி இருவர் அணி, சி.ராஜேந்திரனிடம், பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவகுமார் மூலம் கட்ட பஞ்சாய்த்து நடந்து, இனிது முடிந்தது. ஆவடி நகரமைப்பு ஆய்வாளர் சி.ராஜேந்திரன், 22.11.18ம் தேதி அலுவலகம் வந்தவர், 10 நாட்கள் லீவு எழுதி ஆணையர் அறையில் தூக்கி எறிந்துவிட்டு, தாம்பரம் நகராட்சிக்கு சென்று பொறியாளர் ரவிச்சந்திரனிடம் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார். பிறகு ஆவடி அலுவலகத்தின் நிறுத்தியிருந்த காரை எடுத்துக்கொண்டு சென்றார்.

 கோயில் பதாகையில் பெருமாள் கோயில் நிலம் 14 ஏக்கர் ஆக்ரமிக்கப்பட்டு, போலி பத்திரம் வாங்கிய போலி பட்டாவுக்கு சி.ராஜேந்திரன், முன்னாள் ஆணையரும் இருவரும் அப்ரூவல் கொடுத்துள்ளார்.

 போலி பத்திரம், போலி பட்டாவுக்கு ஆவடி நகராட்சி கொடுத்த பரிந்துரையின் பேரில் சி.எம்.டி.ஏ அப்ரூவலும் கொடுத்துள்ளது. தனக்கு ஒண்ணுமே தெரியாது என்று புலம்பும் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் ராஜேஷ் லகானி ஐ.ஏ.எஸ் புலம்புகிறார்கள். போலி பத்திரம், போலி பட்டாவுக்கு அப்ரூவல் கொடுத்த சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை போகிறார் ராஜேஷ்லகானி..

 சி.எம்.டி.ஏ அதிகாரிகள் ஆவடி, திருவேற்காடு, தாம்பரம், பல்லவபுரம், பூந்தமல்லி ஆகிய நகராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் கொடுத்த அப்ரூவலை ஆய்வு செய்தால், பல அதிகாரிகள் சஸ்பெண்ட் ஆகிவிடுவார்கள்.

 10லீவு என்று கடிதம் கொடுத்த, சி.ராஜேந்திரன் 23.11.18ம் தேதி அலுவலகம் வந்தார். பல கோப்புகளை பார்த்தார்.. சில கோப்புகளை நகல் எடுத்துக்கொண்டார். மாலை 5மணி வரை அலுவலகத்தில் பல கோப்புகளை அடித்து, திருத்தி எழுதிக்கொண்டு இருந்தார்..

 ஆணையர் ஜோதி குமார் அலுவலகம் வரவில்லை. ஆனால் சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆவடி பெரு நகராட்சி அப்ரூவல் கொடுத்து, சி.எம்.டி.ஏவால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் தங்கள் கோப்பு இருக்கிறதா என்று ஆவடிபெரு நகராட்சிக்கு வந்து குவிந்தபடி உள்ளார்கள்..

 ஊழல், முறைகேடு, நிர்வாக சீர்கேட்டில் சிக்கி ஆவடி பெரு நகராட்சி தவிக்கிறது.. விரைவில் மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..

 

 

                             

 

 

Comments

comments