ஆவடி பெரு நகராட்சி உள்ளிட்ட- 9 நகராட்சிகள் கொடுத்த அப்ரூவல்களில்- ரூ1000கோடி இலஞ்சம்..

ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், ஆவடி நகராட்சியை மொட்டை அடித்த பணத்தை வைத்து, திருச்செந்தூர் முருகனுக்கே மொட்டை போட முடிவு செய்துவிட்டார். திருச்செந்தூர் முருகன் காப்பாற்றுவாரா…

 ஆவடி பெரு நகராட்சியில் மக்கள்செய்திமையம் கொடுத்த புகாரின் பேரில் நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் கொடுத்த 15 அப்ரூவல்களை ரத்து செய்ய, சி.எம்.டி.ஏ கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் ஆவடி பெரு நகராட்சி ஆணையர் ஜோதிகுமார் பேரம் பேசி வருகிறார். மேலும் ஆவடியில் கடந்த மூன்றாண்டுகளில் கொடுக்கப்பட்ட அனைத்து அப்ரூவல்களையும் ஆய்வு செய்ய சிறப்புக்குழு அனுப்ப, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

  தாம்பரம், மறைமலைநகர், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, செங்கல்பட்டு ஆகிய ஒன்பது நகராட்சிகளில் கடந்த ஐந்தாண்டுகளில்  நகராட்சிகளின் நகரமைப்பு பிரிவு கொடுத்த அனைத்து அப்ரூவல்கள், சி.எம்.டி.ஏ கொடுத்த அப்ரூவல்களை ஆய்வு செய்து, விதிமுறை மீறல், சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட அப்ரூவல்களை ரத்து செய்ய, வழக்கு தொடர மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது.

 ஆவடி நகராட்சியில் கோயில் பதாகையில் தர்மேஸ் போட்ட லே அவுட் மற்றும் ஆவடி நகராட்சி கொடுத்த  338 – C/26, 284 –C/22, 284- C/10-16, 267-C/16 உள்ளிட்ட பல அப்ரூவல்களில் முறைகேடு நடந்துள்ளது. சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 திருவேற்காடு நகராட்சியில் அய்யனம்பாக்கத்தில், லதா ஆசைதம்பிக்கு கொடுத்த அப்ரூவலை ரத்து செய்ய, சி.எம்.டி.ஏ கடிதம் அனுப்பி ஆறு மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்? சி.எம்.டி.ஏ அதிகாரிகள் குறட்டைவிடுகிறார்களா…

 ஒன்பது நகராட்சிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் நகரமைப்பு பிரிவு பணியாற்றி நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் சொத்துக்கணக்கு, பினாமி கணக்கை ஆய்வு செய்தால், ரூ1000கோடி  இலஞ்சம் வாங்கியது வெளிச்சத்துக்கு வரும்..

 சி.எம்.டி.ஏ அதிகாரிகள் ரமேஷ் & ரூத்ரமூர்த்தி பனப்பாக்கத்தில் ரூ100கோடியில் 300ஏக்கர் பண்ணை வைத்துள்ளார்கள்..

 இதெல்லாம்… சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்க்கு தெரியாதா?

 

                                

 

 

Comments

comments