ஆவடி பெரு நகராட்சி-ஆணையர் ஜோதிகுமாருக்கு மொட்டை-அடுத்து ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்க்கு…ராஜேந்திரனின் மொட்டை சாதனை

ஆவடி பெரு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், திருச்செந்தூர் முருகன் பெயரில் ஆணையர் ஜோதிகுமாருக்கு மொட்டை போட்டுவிட்டார்..ராஜேந்திரன் சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்த 15 கோப்பு கைப்பற்றி சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அப்ரூவலை ரத்து செய்ய, உத்தரவிட்டுள்ளார்கள்.. ஆனால் சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்த கோப்பின் எண்ணிக்கை 200…இதையெல்லாம் ஏன் சி.எம்.டி.ஏ கைப்பற்றவில்லை. பருத்திப்பட்டில் வசந்தநகர் விரிவாக்கம், கோயில்பதாகையில் பாலாஜி நகர் இரண்டு கோப்பைகளையும் ஆய்வின் போது கைப்பற்றாமல் இருக்க  ரமேஷ் & ரூத்ரமூர்த்தி பல இலட்சம் கொடுத்தார் ராஜேந்திரன்..

 இந் நிலையில் பருத்திப்பட்டு, கோயில்பதாகையில் வீட்டு மனை அப்ரூவலுக்கு கடந்தவாரம் சிலர் ராஜேந்திரனை சந்தித்தார்கள்.. ஒரு மனைக்கு ரூ2 இலட்சம் என ரூ1.20கோடி கொடுத்துவிடுங்கள், முன்னாள் ஆணையர் மதிவாணனிடம் கையெழுத்து வாங்கி அப்ரூவல் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னவுடன் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.. ஆணையர் பதவியிலிருந்து மதிவாணன் மாறிவிட்டாரே..சார்.. மாறினால் என்ன..சார்..

 ஒருவர் உட்பிரிவு, லே அவுட் உள்ளிட்ட எதற்கு அப்ரூவல் கேட்ட மனு கொடுத்தவுடன், ஆணையர் நம்பர் போட்டு, சீல் வைக்க வேண்டும். பிறகு பரிசீலனை கட்டணம் ரூ500/- செலுத்த வேண்டும்…பரிசீலனை கட்டணம் கட்டிய பிறகுதான் மனுவை ஆய்வு செய்ய முடியும். ஆனால் பரிசீலனை கட்டணமே, முழுத் தொகையையும் செலுத்தும் போது, பலரிடம் பெறப்பட்டுள்ளது.

 ஆணையராக ஜோதிகுமார் பதவியேற்றப்பிறகும், முன்னாள் ஆணையர் மதிவாணன் பெயரில் சீல் வைக்கப்பட்டுள்ளது…பரிசீலனை கட்டணம் செலுத்தாமல், அப்ரூவல் விண்ணப்பத்தை சரிப்பார்த்து செலுத்த வேண்டிய தொகையை நிர்ணயம் செய்து கட்டும் போது, பரிசீலனை கட்டணம் பெறப்பட்டுள்ளது..இது சட்ட விரோதம்..

 ஆணையர் ஜோதிகுமார் பொறுப்பேற்றப்பிறகு, பழைய சீலை வைத்து, பரிசீலனை கட்டணம் செலுத்தாமல், முன்னாள் ஆணையர் மதிவாணன் கையெழுத்து போட்டு பருத்திப்பட்டில் வசந்தம் நகர் விரிவாக்கம் நான்கு ஏக்கர் மற்றும்  கோயில் பதாகையில் பாலாஜி நகர் 7ஏக்கர்(24 செண்டாக பொது அதிகாரம் ஒரே பெயரில் வாங்கப்பட்டுள்ளது) சப் டிவிசன் பெயரில் சட்டத்துக்கு புறம்பாக, சி.எம்.டி.ஏ விதிமுறைகளை மீறி நகராட்சியே அப்ரூவல் கொடுத்துள்ளது.

     சி.எம்.டி.ஏ உறுப்பினர் –செயலர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்க்கு மொட்டை போட்டு வருகிறார் ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன்…

 

Comments

comments