ஆவடி நகராட்சி.. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை .. அவமதிக்கும் அதிகாரிகள்..பூங்கா பெயரில் போலி பில்கள்..

ஆவடி நகராட்சியின் பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் ஆகிய இரு அதிகாரிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி எந்த தகவல்களையும் தருவதில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி தகவல் கேட்டால், அந்த மனுவை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, அலட்சியமாக செயல்படுகிறார்கள்..

 பூங்கா பராமரிப்பு பெயரில் பல லட்சம் போலி பில் போடப்படுகிறது.. 25.1.18ல் நான்கு பூங்கா கன்ஸ்டிரக்சன் பெயரில் ரூ4.07 இலட்சம், அசோக்ரஞ்சன் நகர் பூங்கா பராமரிப்புக்கு ரூ14.67 இலட்சம். 14.7.17ல் பூங்கா பராமரிப்பு ரூ4.13 இலட்சம் இப்படி பூங்கா பெயரில் கடந்த சில மாதங்களில் 20க்கு மேற்பட்ட  போலி பில்கள்  போடப்பட்டுள்ளது.. பூங்கா போலி பில்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது..

  மத்திய அரசின் சுவச் பாரத் மெசன் திட்டத்தின் கீழ் கழிவறையில் கட்டும் டெண்டரில் மதிப்பீட்டு தொகை ரூ10 இலட்சம் நிர்ணயம் செய்து, எல்லாம் டெண்டரும், மதிப்பீட்டு தொகையைவிட 4.97% அதிகமாக கொடுக்கப்படுகிறது..எல்லாம் ஜெயசீலன் தான்…பொதுப்பணித்துறை, நெஞ்சாலைத்துறை டெண்டர் மதிப்பீட்டு தொகையை விட மைனஸ் ஒப்பந்தகாரர்கள் எடுக்கிறார்கள். ஆனால் ஆவடி நகராட்சியில் எல்லாம் பிளஸில் எடுக்கிறார்கள்..

  செல்போன் டவருக்கு 2015 அக்டோபர் வரை 59 டவர்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டது. கடந்த ஒராண்டுகளாக செல்போன் டவர் எத்தனை உள்ளது என்று ஆய்வு செய்து, சொத்து வரி விதிப்பதில், முறைகேடு நடப்பதாக தெரிகிறது..

   மத்திய அரசின் சுவச் பாரத் மெசன் திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் பணியில் ஊழல் நடந்துள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று ஆதாரங்களுடன்  மத்திய அரசுக்கு புகார் அனுப்பி உள்ளோம்…

          ஆவடி நகராட்சி நிர்வாகம் ஊழலில் சிக்கி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

                       

Comments

comments