ஆவடி நகராட்சியில்- விஜிலென்ஸ் ரெய்டு- ராஜேந்திரன் பணத்துடன் தப்பி ஒட்டம்..விஜிலென்ஸ் கருப்பு ஆடு யார்?

ஆவடி நகராட்சியில் 1.11.18ம் தேதி மாலை 6.15க்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள்.. ஆணையர் ஜோதிகுமார் அறையில் சோதனை நடந்தது.

 விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆவடி நகராட்சிக்கு வருகிற தகவல், நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரனுக்கு சில ரெய்டுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு தெரியவர காரிலிருந்து ரூ3 இலட்சம், பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ37,000 உடன்  காரில் தப்பி ஒடி விட்டார்.  அலுவலக உதவியாளர் பாலாஜியும், டிரைவர் முனியசாமியும் தீபாவளி இலஞ்ச வசூல் பணத்துடன் தப்பி ஒடிவிட்டார்கள்..ஆணையர்  ஜோதிகுமார் என்ன செய்வது என்று புரியாமல் அனைத்தையும் அதிகாரிகளிடம் உளறி கொட்டிவிட்டார்..

 நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு மாதா, மாதம் மாமூல் கொடுப்பதால், விஜிலென்ஸ் அதிகாரிகள் வருவதை முன் கூட்டியே சொல்லிவிட்டார்கள்.. விஜிலென்ஸ் துறையில் உள்ள கருப்பு ஆடு யார் என்பதை, இணை இயக்குநர் முருகன் ஐ.பி.எஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்..

 ஆவடி நகராட்சியை திவலாக்கிய ஆணையர் மதிவாணன், 25.10.18ம் தேதி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆவடி நகராட்சி ஆணையர் ஜோதிகுமாரிடம் 2017 ஜூலை முதல் 2018 மே மாதம் வரை பூங்காக்கள் பராமரிப்பு, புனரமைப்பு பெயரில் ரு25கோடிக்கு போடப்பட்ட போலி பில்கள் தொடர்பான கோப்புகள், ஆகஸ்டு மாதம் 29,30,31 ஆகிய தேதிகளில் நகராட்சியின் நகரமைப்பு பிரிவில் கணனி அட்வைஸ் கொடுத்த விவரங்கள், IHHL கழிப்பிட ஊழல் கோப்புகளை ஆய்வு செய்தார்கள்..வீட்டு மனை வரன்முறை திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான கோப்புகள், விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்த விஜிலென்ஸ் அதிகாரிகள் பல ஊழல் ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார்கள்..

 ராஜேந்திரன், பாலாஜி இருவரின் வங்கி கணக்குகளை, சொத்துக்களையும் ஆய்வு செய்ய, விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்..

 ஆவடி அடையாறு ஆனந்தபவன் ஹோட்டல் சி.சி.டிவி கேமிரா பதிவுகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் பார்த்தாலே பல பேரங்கள், இலஞ்ச பண பரிமாற்றங்கள் நடந்துள்ளது உறுதியாகும்.

 

 

Comments

comments