ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம்- புரோக்கர்கள் பிடியில் மக்கள்..போலி பட்டா – குவியும் கோடிகள்..குறட்டைவிடும் விஜிலென்ஸ் அதிகாரிகள்

சென்னை ஆவடியில் உள்ள தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ள நோட்டைவிட போலி பட்டா அதிகமாக கொடுக்கப்படுகிறது. தனி வட்டாட்சியர் ஸ்ரீதர், கோடிகளில் வலம் வருகிறார்.

  கோயில் பதாகை, திருமுல்லை வாயில், பருத்திப்பட்டு, விளிஞ்சிபாக்கம், முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, தண்டுரை, சேக்காடு, பாலேரிபட்டு, உள்ளிட்ட பல கிராமங்களில் டவுன் சர்வே செய்து, செட்டில் மெண்ட் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

 தனி வட்டாட்சியர் ஸ்ரீதர் அவர்களிடமோ, அலுவலகத்திலோ மக்கள் மனு கொடுத்தால், ஏதாவது காரணம் சொல்லி அனுப்பிவிடுவார்கள்.. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் போது ராஜாராம் தலைமையில் செயல்படும் புரோக்கர்கள் மக்களை அணுகி பேரம் பேசுவார்கள்..

 பேரம் முடிந்து, பண பரிமாற்றம் முடிந்தவுடன் பட்டா கொடுக்கும் பணி சில மணி நேரங்களில் முடிந்துவிடும்..

 ராஜாராம்,முருகேசன், வெற்றி, செந்தில்,குமார், கண்ணன், குட்டி தயாளன், ஜீவானந்தம், கோகுல் உள்ளிட்ட புரோக்கர்கள் அரசு ஆவணங்களை வெளியே எடுத்து சென்று நகல் எடுத்து விற்பனை செய்கிறார்கள்..

 தனி வட்டாட்சியர் ஸ்ரீதர் அய்யா அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு அருகில் ஆந்திரா வங்கி அருகே தனி அலுவலகம் நடத்துகிறார்.. அரசியல்வாதிகள், நில புரோக்கர்கள் குவிந்து கிடப்பார்கள்.. மேய்க்கால் புறம்போக்கு, குட்டை, அனாதீனம், நீர்நிலைபுறம்போக்கு, சுடுகாடு, பாட்டை, ஏரி உள்வாயில், கோயில் நிலம் அனைத்துக்கும், கோபுரம் சீலுடன் போலி பட்டா இரவு முழுவதும் வழங்கபடுகிறது..கோடிகளில் குளிக்கிறார்கள்..

 கோயில் பதாகையில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 24 ஏக்கர் புஞ்சை நிலத்துக்கு, பட்டா வழங்கிவிட்டார்கள்..

  ஆவடி தனி வாட்டாட்சியர் ஸ்ரீதர் மற்றும் புரோக்கர்கள் குவித்த கோடிகள் தொடர்பாக ஆவணங்கள், ஆதாரங்களுடன் மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளது..

 ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பட்டா தொடர்பாக மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றத்தில் சில நாட்களில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

 அது..சரி.. திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அதிகாரிகள் இருக்கிறார்கள்…

 

                      

         

 

Comments

comments