ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்

ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜாராம், குமார் தலைமையில் புரோக்கர்களின் அட்டகாசத்தை புகைப்படங்களுடன் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆவடி தனி வட்டாட்சியர் ஸ்ரீதர், வட்டாட்சியர் அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டுவிட்டது. மக்கள் வரும் போதும், அலுவலகத்திலிருந்து வெளியே போகும் போதும் பூட்டிய கதவை திறக்க ஜெயில் வார்டன் போல் வெற்றி என்ற ஊழியர் நிற்பார்.. மக்கள் ஜெயில் கைதி போல், பூட்டிய அலுவலகத்துக்குள் நிற்க வேண்டும்..

 வட்டாட்சியர் அலுவலகத்தில் செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 10 நிமிடம் மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நின்றால் போது, வட்டாட்சியர் ஸ்ரீதர் டென்சனாகி மனு கொடுத்துவிட்டால் போங்கள் என்று விரட்டி அடிப்பார்..

 ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம் புழல் சிறைச்சாலையாக காட்சியளிக்கிறது. மக்கள் தவிக்கிறார்கள்..

 ராஜாராம், குமார் புரோக்கர் கும்பல் ஒரு பக்கம், வட்ட துணை ஆய்வாளர் சிவக்குமார், தற்காலிக ஊழியர்களை வைத்துக்கொண்டு மறுபக்கம் இவர்களிடம்  சான்றிதழில், பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா தொடர்பாக வரும் மக்கள் சிக்கி தவிக்கிறார்கள்.. யாரிடம் இலஞ்சம் கொடுத்தோம் என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்..

 முன்னாள் வட்டாட்சியர் வில்சன், தற்போது வட்டாட்சியர் ஸ்ரீதர் இருவராலும் கொடுக்கப்பட்ட 10,000 பட்டாவில் 4000 பட்டா போலி பட்டா இதற்கான ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 ந.க.எண்.3217/2018/ஆ1 நாள் 23.5.18ல் கொடுக்கப்பட்ட தடையில்லா சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தாலே ஆவடி தனி வட்டாட்சியர்கள் வில்சன், ஸ்ரீதரின் பல ஊழல்கள், போலி பட்டாக்கள் அம்பலமாகும்…

Comments

comments