ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம்-வட்டாட்சியர் பதவி விலை ரூ20இலட்சம்..வில்சன் & ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்…மக்கள் போராட்டம்.. 10,000 போலி பட்டா விவகாரம்…

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெரு நகராட்சி பகுதிக்கு என்று அமைக்கப்பட்ட ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில்  கொடுக்கப்பட்ட 10,000 போலி பட்டா விவகாரம் விஸ்வரூபமாகி மக்கள் போராட தொடங்கிவிட்டார்கள்..

  தனி வட்டாட்சியராக விஜயலட்சுமி, கொடுத்த பட்டாக்களை கணனியில் பதிவு செய்துவிட்டார். ரூ10 இலட்சம் கொடுத்து வட்டாட்சியர் பதவியை விலைக்கு வாங்கி வில்சன் கொடுத்த பட்டாக்களை கணனியில் பதிவு செய்யவில்லை. வில்சன் கொடுத்த பட்டாவில் 4000 பட்டா போலி பட்டா..

 ரூ20 இலட்சம் கொடுத்து, தனி வட்டாட்சியர் பதவியை விலைக்கு வாங்கிய ஸ்ரீதர், வட்டாட்சியர் வில்சனை மாற்றினார். வட்டாட்சியராக ஸ்ரீதர் பொறுப்பேற்றப்பிறகு கொடுக்கப்பட்ட 6000 பட்டாவும் போலி பட்டாதான் என்று நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு கொடுத்த பட்டாவை பார்த்தாலே உண்மை தெரியும்..யாருக்கு பட்டா கொடுத்தோம் என்று ரூல் போட்ட நோட்டில் எழுதி வைத்துள்ளார். ரூல் நோட்டில் பட்டா கொடுத்தவர்கள் பெயரை மாற்றி எழுதி, வேறு ஒருவருக்கு பட்டா கொடுக்கலாமே…

 உதாரணமாக பிளாக் எண்.23 – சர்வே எண்.77/1-1 என்பது சீலிங் நிலம், நில உச்சவரம்பு சட்டத்தின் படி பறிமுதல் செய்யப்பட்ட நிலம். அந்த நிலத்திற்கு நேமிச்சந்துக்கு பட்டா கொடுத்து உள்ளார்கள். ஆவடிநகர அளவை நிலப்பதிவேட்டில் பதிவு செய்துள்ளார்கள்..

 கோயில் பதாகையில் தர்மேஸின்  MCB(Meadows) வீட்டுமனைக்கு, வழியே இல்லை. பெருமாள் கோயில் நிலத்தில் வழி அமைத்து, அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோயில் பெயரில் பட்டா இருக்கிறது. பெருமாள் அந்த நிலத்தை விற்கவும் இல்லை, குத்தகைக்கு கொடுக்கவும் இல்லை. பிறகு எப்படி பெருமாள் கோயில் நிலத்தில் வழி அமைத்து, அப்ரூவல் கொடுக்கப்பட்டது எப்படி?

 பெருமாள் கோயில் நிலத்துக்கு, தனி வட்டாட்சியர் அலுவலகம் புரோக்கர் குமார் மூலம் போலி என்.ஒ.சி கொடுக்கப்பட்டுள்ளது..

 தனி வட்டாட்சியராக வில்சன் & தற்போது வட்டாட்சியராக இருக்கும் ஸ்ரீதர், புரோக்கர்கள் கூட்டணி ஆவடியில் கொடுத்த 10,000 பட்டாவில் 8000 பட்டாவில் முறைகேடு நடந்துள்ளது.

 தனி வட்டாட்சியர் அலுவலகத்தில், தினமும் மக்கள் குவிந்து, எங்கள் பட்டா உண்மைதானா என்று கேட்டு வருகிறார்கள்..

 திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தனி வட்டாட்சியர் ஸ்ரீதர் மற்றும் வில்சன் இருவரையும் சஸ்பெண்ட் செய்து, இரண்டு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட 10,000 பட்டாவை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது..

 

 

Comments

comments