ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம் – வட்டாட்சியர்கள் வில்சன் – ஸ்ரீதர் கூட்டணியின் 10,000 போலி பட்டா மேளா… 9630 இலவச பட்டாவில் 3000 பட்டா போலி..

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி பகுதிக்கு மட்டும் தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. வட்டாட்சியராக விஜயலட்சுமி இருந்த வரையில் கொடுக்கப்பட்ட பட்டாக்களை கணனியில் பதிவு செய்து முறைப்படுத்தினார்.

 தனிவட்டாட்சியராக இருந்த வில்சனும், தற்போது தனி வட்டாட்சியராக இருக்கும் ஸ்ரீதரும் புரோக்கர் சங்கத்தின் தலைவர் ராஜாராம் தலைமையில் செயல்படும் முருகேசன், வெற்றி, செந்தில், குமார், கண்ணன், குட்டி தயாளன், ஜீவானந்தம், கோகுல் உள்ளிட்ட 12 பேர் புரோக்கர்களாக வலம் வந்தார்கள்..

 மேய்க்கால் புறம்போக்கு, குள, குட்டை, நீர் நிலைபுறம்போக்கு, ஏரி உள்வாயில், கோயில், அனாதீனம் ஆகிய நிலங்களுக்கு போலி பட்டா கொடுத்து சாதனை செய்தார்கள்.. வில்சன் & ஸ்ரீதர் இருவரும் சுமார் 10,000 பட்டாக்கள் கொடுத்துள்ளார்கள். இந்த 10,000பட்டாவும் கணனியில் பதிவு செய்யப்படவில்லை. பட்டாக்களில், பட்டா தொடர்பான எண்ணே இருக்காது. பிறகு எப்படி யாருக்கு பட்டா கொடுக்கப்பட்டது, இது தொடர்பான கோப்பை கண்டுபிடிப்பார்கள்..10,000 பட்டாவில் 7000 பட்டா போலி பட்டா என்பதுதான் உண்மை..

  ரூல் போட்ட நோட்டில் எழுதி வைத்தியுள்ளார்கள்.. வட்டாட்சியர்களும், புரோக்கர்களும் போலி பட்டா மூலம் உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார்கள்..

     புரோக்கர்கள்  நில பதிவேட்டிலும், “அ” பதிவேட்டிலும் பணத்துக்காக பல திருத்தங்களை செய்துள்ளார்கள்.. வட்டாட்சியர்கள் பணத்துக்காக எதையும் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் ஆவடி நகராட்சிக்குட்பட்ட வீட்டுமனை, வீடுகள், நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் தயவுசெய்து, பட்டாக்களை ஆய்வு செய்யுங்கள்  வட்டாட்சியர்கள் வில்சன் &  ஸ்ரீதர் & புரோக்கர் கும்பல், பணம் வாங்கிக்கொண்டு பட்டாவை அடுத்தவர் பெயருக்கு மாற்றியிருப்பார்கள்..

 TS No.716/1- 25செண்ட் புஞ்சை தரிசுக்கு போலி பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. பாலவேடு சர்வே எண்.179ல் உள்ள ஏழு செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு ஒருவருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களை வைத்து, ஏழை, எளியவர்களுக்கு கொடுக்கப்பட்ட 9630 இலவச பட்டாவில் 3000 பட்டா போலி பட்டா

 கடந்த மூன்றாண்டுகளில் ஆவடி தனிவட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வில்சன், வட்டாட்சியர் ஸ்ரீதர் கொடுத்த அனைத்து பட்டாக்களையும் ஆய்வு செய்யும்படி மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஐ.ஏ.எஸ், வருவாய்த்துறை செயலாளருக்கும் ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    2016,2017,2018 2019 ஜனவரி வரை ஆவடி தனி வட்டாட்சியர்களால் கொடுக்கப்பட்ட அனைத்துப் பட்டாவையும் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனைத்து பணிகளும் நடந்து வருகிறது..

 

 

Comments

comments