ஆவடி அடையாறு ஆனந்தபவன்.. கட்டிடத்துக்கு அனுமதி இல்லை.. சி.எம்.டி.ஏ அறிவிப்பு

ஆவடியில் புதிய மில்லரி சாலை, திருமலைராஜாபுரத்தில் செயல்படும் ஆவடி அடையாறு ஆனந்தபவன் ஹோட்டல் இரயில்வே புறம்போக்கு நிலத்தில் கட்டுப்பட்டுள்ளதாக தெரிகிறது

 அடையாறு ஆனந்தபவன் ஹோட்டலுக்கு, கட்டிட அனுமதி, ஆவடி பெரு நகராட்சியில் அனுமதி  அளிக்கப்பட்ட விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்டோம். தகவல் அளிக்கவில்லை. மேல்முறையீடு செய்தும் தகவல் அளிக்கவில்லை.

 சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்கப்பட்டது. முதலில் 245, புதிய மில்லரி சாலை, திருமலைராஜாபுரத்தில் அடுக்குமாடி கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று தகவல் அளித்தார்கள். நாம் மீண்டும் அடுக்குமாடி கட்டிடம் இல்லாமல், எந்த கட்டிடமாவது கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக என்ற கேட்டத் தகவலுக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

 மீண்டும் 245, புதிய மில்லரி சாலை, திருமலைராஜாபுரம் முகவரி சுமார் 5000 சதுர அடியில்  ஹோட்டல் செயல்படுவதை சுட்டிக்காட்டி கேட்டோம். எந்த கட்டிடத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை. அமுலாக்கப்பிரிவில் இக்கட்டிடம் சம்பந்தமாக கோப்புகள் எதுவும் இல்லை என்று தகவல் அளித்துள்ளார்கள்..

 சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் தகவலின்படி ஆவடியில் அடையாறு ஆனந்தபவன் செயல்படும் கட்டிடத்திற்கு அனுமதி அளிக்கவில்லை…

 பிறகு எப்படி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி, அடையாறு ஆனந்தபவன் ஹோட்டல் செயல்படுகிறதே என்ற கேள்வி எழுந்துள்ளது.

           இந்த கேள்விக்கு ஆவடி பெரு நகராட்சிதான் பதில் அளிக்க வேண்டும்…

 

 

Comments

comments