ஆளுநரை ஏமாற்றும்-தமிழக அரசின் எரி சக்தித்துறை

தமிழக ஆளுநர் அவர்களுக்கு, அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகள் தொடர்பான புகார் குவிந்த வண்ணம் உள்ளது. ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தங்களுக்கு வந்த புகாரின் பேரில் தமிழக அரசின் துறை செயலாளருக்கு அனுப்பி, விவரங்கள் கேட்கிறார்கள்.. ஆனால் ஆளுநர் மாளிகை துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் நிலையை பாருங்கள்..

 மக்கள்செய்திமையம் தமிழ்நாடு மின்சாரவாரியம்  விவசாயிகளின் இலவச பம்பு செட்டுகளுக்கு, தமிழக அரசிடமிருந்து பெறப்பட்ட மானியத்தில் ரூ15,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது என்று ஆதாரங்களுடன் புகார் அனுப்பினோம்.

 ஆளுநர் மாளிகை, எரி சக்தித்துறை செயலாளருக்கு அனுப்பி சில விவரங்களை கேட்டது. எரி சக்தித்துறை, ஆளுநர் மாளிகையின் கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு நடவடிக்கை எடுத்து, பதில் அளிக்கும்படி, கடிதம் எழுதியுள்ளது.

  தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் தலைவர் மீதுதான் புகாரே கூறியுள்ளது. நம் புகாரில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கருத்து,நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பார்..

 மக்கள்செய்திமையம் புகார் மனுவை குப்பைக் கூடையில் போடுவார்.. அவ்வளவுதான்.. ஆளுநர் மாளிகையை எப்படியெல்லாம் தமிழக அரசு அதிகாரிகள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.. என்பதற்கு இதோ ஆதாரம்..

  தண்ணீர் ..தண்ணீர் திரைப்படத்தில் அத்திப்பட்டி கிராமத்தில் குடிக்க நீர் இல்லை என்று அமைச்சரிடம் கொடுக்கும் புகார் குப்பைக் கூடைக்கு போன கதைதான் நமக்கு நினைவுக்கு வருகிறது…

 

 

Comments

comments