அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ அலுவலகம்- குப்பை மேடா – டெங்கு கொசு பண்ணையா..

சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு அளித்த அப்பாவி மக்களை சந்திக்க, அரசு செலவில் எம்.எல்.ஏ அலுவலகம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தை பெரும்பாலும் பயன்படுத்தாத காரணத்தால் சமூக விரோதிகளின் புகழிடமாக மாறிவிட்டது.

 அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அலெக்ஸாண்டர்(அருமையான புரட்சி வீரனின் பெயர்) அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. கண்ணாடிகள் உடைந்து குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

 ஒரு அறையில் மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் கிளாஸ், கற்கள் என்று குவிந்துகிடக்கிறது. எம்.எல்.ஏ அலுவலகமே டெங்கு காய்ச்சல் கொசு, பன்றி காய்ச்சல் கொசு உற்பத்தி செய்யும் பண்ணையாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது..

 அரசு செலவில், மக்களை சந்திப்பதற்காக கட்டப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்தின் நிலையை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது..

 அம்பத்தூர் மக்களே.. இனியும் இப்படிப்பட்ட எம்.எல்.ஏவுக்கு அல்லது எம்.எல்.ஏயின் கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டுமா என்று கொஞ்சும் சிந்தியுங்கள்…

                             

Comments

comments