அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் – செட் அப் பாக்ஸ் கொள்முதல் முறைகேடு -கோவை வேல்முருகன் கைது.

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, எஸ்.பி.கே கன்ஸ்டிரக்சன் நாகராஜனை தொடர்ந்து Mantra industries pvt ltd நிறுவனம் சிக்கியுள்ளது.  ஜி.எஸ்.டி வரியை ஏமாற்றியதாக Mantra industries pvt ltd இயக்குநர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்..

தமிழக அரசின் கேபிள் டிவி கார்ப்பரேசன் லிமிட் நிறுவனத்துக்கு செட் அப் பாக்ஸ் கொள்முதல் டெண்டர் Mantra industries pvt ltd நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் செட் அப் பாக்ஸ் டெண்டர் உலக அளவில் கோரப்பட்டது. ஏனென்றால் செட் அப் பாக்ஸ் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை.

Mantra industries pvt ltd ரூ482 கோடிக்கு வெளிநாட்டிலிருந்து செட் அப் பாக்ஸ்  இறக்குமதி செய்து, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனுக்கு சப்ளை செய்தது. ஜூலை 2017 முதல் ஏப்ரல் 2018 வரை GST duty liability Rs 83 கோடி.. ஆனால் Mantra industries pvt ltd செலுத்தியது ரூ16,680…

Mantra industries pvt ltd வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துவிட்டு, Lakshmi industries and Balaji machine works pvt ltd இரு நிறுவனங்களிடமிருந்து செட் அப் பாக்ஸ் கொள்முதல் செய்ததாக போலி பில்லை, காட்டி GST வரியை ஏமாற்றியுள்ளது. Mantra industries pvt ltd இயக்குநர் வேல்முருகன் தான் Balaji machine works pvt ltd  & Lakshmi industries இரு நிறுவனங்களின் இயக்குநர். இந்த இரண்டு நிறுவனம் செட் அப் பாக்ஸ் இறக்குமதி செய்யவில்லை..

Mantra industries pvt ltd இயக்குநர்கள் வேல்முருகன் , கணேச நாடார், பாலமுருகன் கணேசன் செட் அப் பாக்ஸ் இறக்குமதியில் அரசுக்கு சுமார் ரூ83கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளார். வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.. கணேச நாடார், பாலமுருகன் கணேசன் இருவரும் தலைமறைவாகி உள்ளார்.. GST ஆணையர் சீனிவாச ராவ் தலைமறைவான இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளார்..

அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் நிர்வாக இயக்குநராக இருந்த குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் செட் அப் பாக்ஸ் கொள்முதலில் ஜி.எஸ்.டி வரியில் மோசடி செய்த Mantra industries pvt ltd நிறுவனத்துக்கு  ஆதரவாக, காப்பாற்ற முயற்சி செய்த காரணத்தால், மத்திய சுங்க வரி ஆணையரகத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்..

 

 

 

Comments

comments