
அம்மா ஆசிரமம் பெயரில் மோசடி செய்து வந்ததாக மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் உரிமையாளர் கம் ஆசிரியர் அரவிந்தன் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு (331/2019)செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன் தலைமறைவாகி உள்ளார். ஆனால் அரவிந்தனை உதவி ஆணையர் ஒருவர் காப்பாற்றுவதாக தெரிகிறது.
அம்மா ஆசிரமம் பெயரில் மூன்று வருடங்களுக்கு முன்பு பொன்னேரி அருகில் ஊத்துக்காட்டில் பாழடைந்த கட்டிடத்தில் போர்டு தொங்குகிறது. அந்த போர்டும் தற்போது இல்லை. மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் அரவிந்தன், அம்மா ஆசிரமம் பெயரில் வறுமையில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் தவிக்கும் 30க்கு மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தி, வீடு, வீடாக ஆசிரமம் பெயரில் சென்று பழைய துணைகளை பெறுவது, அம்மா ஆசிரமம் பெயரில் உண்டியல் கொடுத்து வசூல் செய்வது, நன்கொடை வசூல் செய்வது என்று பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
தேனாம்பேட்டையில் குடியிருக்கும் வீட்டில், அம்மா ஆசிரமத்துக்கு பழைய துணைகளை பெறுவது போல் நடித்து ரூ11.50 இலட்சத்தை திருடிவிட்டார்கள்.. அம்மா ஆசிரமம் பெயரில் கொடுத்த துண்டு பிரசுரத்தை வைத்து, அம்மா ஆசிரமத்தை தேடினார்கள். ஆசிரமே இல்லை. ஆனால் பழைய கட்டிடத்துக்கு, கடிதங்கள் மட்டும் வருகிறது என்பதை உறுதி செய்த பின்பு, துண்டு பிரசுரத்தில் உள்ள செல்போன் எண்களை வைத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள்.. அரவிந்தன் உதவி ஆணையர் ஒருவர் உதவியுடன் தலைமறைவாகிவிட்டார். அரவிந்தனின் நெருக்கமான மகாலட்சுமி மட்டும் சிக்கியுள்ளார். மகாலட்சுமி வீட்டில் ரூ11.03இலட்சம் கைப்பற்றப்படுகிறது.
மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் ஆசிரியர் அரவிந்தன், சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ் உடன் எடுத்த போட்டோவை, முகநூல், வாட்ச் அப் குருப்பில் போட்டு, காவல்துறை ஆணையருக்கு நெருக்கமானவர் என்று காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வலம் வருகிறார் என்பது தெரிகிறது.
கடையில் விற்பனைக்கு வராத மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் ஆசிரியர் அரவிந்தனுக்கு தமிழக அரசின் செய்தித்துறையில் ஊடக அங்கீகார அட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. அரவிந்தன் செய்தித்துறை துணை இயக்குநர் சுப்ரமணியம் மற்றும் கூடுதல் இயக்குநர் பொறுப்பில்பதவி நீட்டிப்பு பெற்று, பிறகு ராஜினாமா செய்த எழிலழகன் அய்யாவுக்கும் நெருக்கமானவர். செய்தித்துறையில் ஊடக அங்கீகார அட்டை, பிரஸ் பாஸ் வாங்கிகொடுக்கும் புரோக்கராகவும் அரவிந்தன் செயல்பட்டு உள்ளதாக செய்தித்துறை அதிகாரிகள் புலம்புகிறார்கள்..
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறு பத்திரிகைகள் நடத்தும் சிலர் காவல்துறை அதிகாரிகளை பாராட்டி செய்தி வெளியிட்டு, அந்த புத்தகத்தை காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்து, புகைப்படம் எடுத்து, அதை வெளியிட்டு, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமான பத்திரிகையாளர் என்று அதிகாரமையத்தில் வலம் வருவது சர்வ சாதாரணமாக தமிழகம் முழுவதும் நடக்கிறது.
மக்கள் நம்பிக்கை ஆசிரியர் அரவிந்தன் கைது செய்யப்பட்டால், அம்மா ஆசிரமம் பெயரில் நடந்த பல மோசடிகள், அரவிந்தன் பின்னணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள், செய்தித்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல மர்மங்கள்வெளிச்சத்துக்கு வரும்.