அமைச்சர் விஜயபாஸ்கர் விழாவில்.. மனிதாபிமானம் செத்து போச்சு… முதல்வர் விஜயபாஸ்கர் என்று கோஷம்/MINISTER VIJAYABASKER “ZERO”.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாலின வழிகாட்டி மையத்தின் திறப்பு விழாவை 3.6.19ம் தேதி காலை 9.30மணிக்கு என்பதை 10.30க்கு மாற்றினார். மீண்டும் 9.30மணிக்கு மாற்றினார். அமைச்சர் விஜயபாஸ்கர் விழா என்றாலே ஆடம்பரத்துக்கு பஞ்சம் இருக்காது. மேக்கப்புடன் பெண்கள் காலை 8.30மணியிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வருகைக்காக காத்திருந்தார்கள்..

  காலை 9.30மணியளவில் விழாவிற்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், இரண்டு டிவி பெயரை சொல்லி, அந்த டிவி வரவில்லையா என்றார்.. சுகாதாரத்துறை அதிகாரிகள் இல்லை என்றவுடன், டீன் அறையில் போய் 1.30மணி நேரம் உட்கார்ந்துவிட்டார். மேக்கப்புடன் இருந்த பெண்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் அவதிப்பட்டார்கள். தண்ணீர் குடித்தால் மேக்கப் கலைந்துவிடுமாம்…மேக்கப்புடன் இருந்த பெண்கள் சுமார் 2மணி நேரம் அவதிப்பட்டதை பார்க்கும் போது, மனிதாபிமானம் செத்து போச்சா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்டர்கள் பாவம் மேக்கப்புடன் பெண்கள் காலை 8.30மணியிலிருந்து காத்திருக்கிறார்கள் மணி 11 ஆகிவிட்டது என்று புலம்பினார்கள்..

 இரண்டு டிவி நிருபர்கள், வீடியோ கேமிராவுடன் வந்தவுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், விதவிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தப்படியே மையத்தை திறந்துவைத்தார்..

 பாலின வழிகாட்டி மையத்தின் திறப்பு விழாவிற்கு வந்த டாக்டர்கள், அரசு அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரைப்பற்றி புலம்பியபடியே இருந்தார்கள்..

         வருங்கால முதல்வர் விஜயபாஸ்கர் என்று மெல்லிய கோஷம் எழுந்த போது, அமைச்சர் விஜயபாஸ்கர் மகிழ்ச்சியில் மூழ்கினார்…முதல்வர் விஜயபாஸ்கர் கோஷம் ஒலித்துக்கொண்டே இருந்தது..

Comments

comments