அமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…

தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம், இடது கரம் ஆல் இன் ஆல் கோவில்பட்டி அம்பிகா வேலுமணி ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக பிராந்தி, விஸ்கி விற்பனை செய்ததாக  கோவில்பட்டி காவல்துறை கைது செய்துள்ளது.

 அம்பிகா வேலுமணி சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்டப் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அம்பிகா வேலுமணி முக்கிய தொழில் பிராந்தி, விஸ்கி, பீர் 24 மணி நேரமும், 365 நாட்களும் விற்பனை செய்வதுதான்.. அமைச்சர் கடம்பூர் ராஜூ வலது, இடது கரம் என்பதால் கோவில்பட்டி காவல்துறை கண்டுகொள்ளவில்லை.

 அம்பிகா வேலுமணி கைது செய்தவுடன், அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிர்ச்சியாகி அம்பிகா வேலுமணியை வழக்கு போடாமல் உடனடியாக விடுவிக்கும்படி காவல்துறை அதிகாரிகளை மிரட்டினார். ஆனால் கோவில்பட்டி காவல்துறை அதிகாரிகள் நான் தாண்டா நிழல் அமைச்சர் என்று அம்பிகா வேலுமணியின் ஆட்டம் அதிகமாகவே, கைது செய்துவிட்டார்கள்..

 அதிமுக ஆட்சி கட்டில் ஆட்டம் காண தொடங்கியதும், காவல்துறையினர் நிழல் அமைச்சர் ஆல் இன் ஆல் அம்பிகா வேலுமணியை கைது செய்து, கோவில்பட்டி மக்களின் பாராட்டுகளை பெற்றுவிட்டார்கள்…

 

 

Comments

comments