அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு என்னாச்சு….திமுக திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது, கோவில்பட்டி 2வது குடி நீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, திட்ட பணிகளை  தொடங்கிவைத்தார்.. ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்ட திட்டப்பணிகளை மீண்டும்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 11.5.18ம் தேதி  கோவில்பட்டியில் 2வது குடிநீர் திட்டத்தை தொடக்கி வைத்தார். பணி முடிய  ஒரு வருடத்திற்கு முன்பே திட்டத்தை துவக்கி வைத்த பெருமை எடப்பாடி பழனிசாமியை சேரும். 2வது குடி நீர் திட்ட பணிகள் முடியாத நிலையில் எப்படி பெண்கள் குடி நீர் குடத்தில் பிடிப்பார்கள் என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூதான் பதில் சொல்ல வேண்டும்.

     கோவில்பட்டி நகராட்சிக்கு முதலாவது குடிநீர் திட்டம் 1976ம் ஆண்டு பெரியசாமி தேவர் அவர்களால் கொண்டு வரப்பட்டது. இந்த முதலாவது குடிநீர் திட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு கடந்த 35ஆண்டுகளாக எந்தவிதமான தடையும் இல்லாமல் தினசரி 60இலட்சம் லிட்டர் வந்து கொண்டிருக்கிறது. 2வது குடிநீர் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டபணிகள் திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.  திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவில்பட்டி 2வது குடிநீர் திட்டம் காயல்பட்டிணம் குடிநீர் திட்டம் ஆகிய இரண்டு  குடிநீர் திட்டங்களை  ஆந்திரா முன்னாள் முதல்வரும், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஒய்.எஸ்.ஆர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி நிறுவனம்  ஒப்பந்தம் எடுத்தது. ஆனால் பணிகளை மேற்கொள்ளும் நேரத்தில் திமுக ஆட்சி முடிந்தது. ஜெகன்மோன்ரெட்டியும் தனிக்கட்சி ஆரம்பித்து பலவழக்குகளில் சிக்கியதால் பணிகளை செய்யவில்லை.

   பின்பு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தது.  நகராட்சி சேர்மனாக இருந்த ஜான்சிராணிக்கும் எம்எல்ஏவாக இருந்த கடம்பூர் ராஜூக்கும் மோதல் இருந்ததால், புதியதாக டெண்டர் எடுத்தவரை பணி செய்யவிடாமல் முடக்கி வைத்தார்.. பிறகு தனக்கு நெருக்கமான  வரதராஜன்  நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றவுடன், மீண்டும் இரண்டாவது குடி நீர் திட்டபணிகளை ஆணையர் வரதராஜன் மூலம் மீண்டும் டெண்டர் கொடுத்தார். அதனால் இன்னும் பணிகள் முடியவில்லை..   

    கோவில்பட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 36வார்டுகளில் பைப்லைன் முழுவதும் பதிக்கவில்லை. மேலும் மூன்று மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்படவில்லை. இந்த பணிகளையெல்லாம் முடிய இன்னும்  ஒரு வருடம் ஆகும். பணிகள் முடிவடையாத நிலையில் எங்கே ஆட்சி கலைந்துவிடுமோ என்ற பயத்தில் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம்  2வது குடி நீர் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.

    2 வது குடி நீர் திட்ட பணிகளில் தொடக்கத்தில் ரூ82 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, 2வது குடிநீர் திட்டம் தற்போது விரிவாக்கம் என்ற பெயரில், சில மாறுதல்கள் செய்து, மதிப்பீட்டை ரூ120கோடிக்கு உயர்த்தி பணிகள்  நடைப்பெற்று வருகிறது.. மேலும், நடைப்பெற்ற அரசு விழாவிற்கு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ரூ60இலட்சம் கேட்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றதாக, குடி நீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகள் புலம்புகிறார்கள்.. நாங்கள் அமைச்சருக்கு கொடுத்த ரூ60 இலட்சத்துக்கு போலி பில் போட வேண்டும் என்கிறார்கள்..

    மேலும் விழாவில் கடம்பூர் ராஜூவின் வெற்றிக்கு உறுதினையாக இருந்த குறிப்பிட்ட ஒரு ஜாதியை புறக்கணித்துள்ளார். இனம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்க தலைவராக இருந்த ஈஸ்வரபாண்டியன் மீண்டும் இதே சங்கத்திற்கு போட்டியிட விண்ணப்பம் செய்த போது அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவால்,  ஈஸ்வரபாண்டியன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 கோவில்பட்டி தொகுதி முழுவதும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு எதிராக மக்கள் திரும்பிவிட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்…

 ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர் ஹரி நாடாரை சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சமீபத்தில் சந்திக்க வைத்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ…

 அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு என்னாச்சு என்று தெரியவில்லை….

 

Comments

comments