அமைச்சர்கள் வீட்டு திருமணங்களில்-திருடப்படும் மின்சாரம்-ஆண்டுக்கு ரூ100கோடி இழப்பு…

தமிழ்நாடு மின்சாரவாரியம் நட்டத்தில் செயல்படுவதாக அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை புலம்புகிறார்கள்..ஆனால் ஏன் நட்டம் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்வதே இல்லை.

  அமைச்சர்கள், ஆளும்கட்சியின் வி.ஐ.பிக்களின் திருமணங்களுக்கு வைக்கப்படும் கட் அவுட்களுக்கு மின்சாரம் திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

  சில நாட்களுக்கு முன்பு வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அமைச்சர் பெஞ்சுமின் மகன் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தது. 10கிமீட்டருக்கு இரண்டு பக்கமும் கட் அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.

 அமைச்சர் பெஞ்சுமின் மகன் திருமணத்திற்கு வைக்கப்பட்ட கட் அவுட்டுகளுக்கு, மின்சார கம்பங்களிலிருந்து நேரடியாக மின்சாரம் திருடப்படும், புகைப்படங்களை பாருங்கள்…

 இப்படி அமைச்சர்களின் வீட்டுத் திருமணங்கள், ஆளும்கட்சியின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் தேர்தல் நேரத்தில் நடக்கும் பிரச்சார கூட்டங்களுக்கு மின்சாரம் திருடப்படுவதால், தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ100கோடி இழப்பு ஏற்படுகிறது..

  தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை..ஆண்டுக்கு ரூ100கோடி மின்சாரம் திருடப்பட்டால், பிறகு எப்படி மின்சாரவாரியம் இலாபத்தில் செயல்படும்..

 

                                  

 

 

Comments

comments