அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை காப்பாற்ற விஜிலென்ஸ் ரெய்டு- 2700 கிராம் தங்க காசு வசூல்?

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை காப்பாற்ற ரெய்டு நடத்தி வருகிறது. அமைச்சர் அலுவலகங்கள், துறைத் தலைவர் அலுவலகங்களில் ஏன் ரெய்டு நடத்தவில்லை.

 நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் உத்தரவின் பேரில் 1.11.18 ஆய்வு கூட்டம் நடந்தது. ஆய்வு கூட்டம் தொடர்பான கடிதத்தில் ஆய்வு கூட்டம் எங்கே நடக்கிறது என்ற தகவல் இல்லை. மெட்ரோ வாட்டர் அலுவலம், குடி நீர் வடிகால் வாரிய அலுவலகங்களில் , மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளிடம்  தீபாவளி இலஞ்சம் வசூல் நடந்தது.

 நகராட்சி ஆணையர் 8கிராம் தங்க காசு, நகராட்சி பொறியாளர்  8கிராம் தங்க காசு என்று 125 நகராட்சிகளிலும் தலா இரண்டு 8 கிராம் தங்க காசு என்று 250 பவுன்(8கிராம்) வசூல் செய்யப்பட்டது. மேலும் சென்னையை தவிர மற்ற மாநகராட்சி அதிகாரிகள் 40 கிராம் தங்க காசு, பெரிய நகராட்சிகளில் நகரமைப்பு ஆய்வாளர்கள் 8 கிராம் தங்க காசு என்று 1.11.18ம் தேதி மட்டும் 2700 கிராம் அதாவது 8 கிராம் தங்க காசு 350 பவுன் தீபாவளிக்காக இலஞ்சம் வசூல் நடந்தது. இந்த வசூல் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தெரியாதா?

 ஆர்.டி.ஒ அலுவலகங்களில் நடத்திய ரெய்டை, எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில் நடத்தியிருக்கலாமே? ஏன் நடத்தவில்லை.

 ஆவடி நகராட்சியில் ரெய்டு நடக்கு முன்பே, விஜிலென்ஸ் டி.எஸ்.பி உதயசங்கரின் டிரைவர் ஆவடி நகராட்சி நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரனுக்கு செல்போன் வாட்ச் அப் காலில் சொல்லிவிட்டார். ராஜேந்திரன் காரில் பல லட்சம் பணத்துடன் தப்பி ஒடிவிட்டார்.. ஆவடி நகராட்சி ரெய்டில் நடந்தது என்ன என்று டி.எஸ்.பி உதயசங்கர் அறிக்கை வெளியிடுவாரா?

 மதுரை மாநகராட்சியில்  முன்னாள் தலைமை பொறியாளருமான, தற்காலிக நிக்கம் செய்யப்பட்டுள்ள மதுரத்திற்கும், மதுரை நகர பொறியாளர் பொறுப்பில் இருக்கும் அரசுக்கு மோதல். ஒருவர் மீது ஒருவர் விஜிலென்ஸில் புகார் கொடுக்க, ரெய்டு நடந்தது..

 மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் ஐ.ஏ.எஸ்க்கு வெள்ளி பொருட்கள் குவிந்துள்ள செய்தி தெரியாதா? மாநகராட்சி அதிகாரிகள் இலஞ்சத்தில் மூழ்கியிருப்பது தெரியாதா? நிர்வாகத்தின் என்ன நடக்கிறது என்று தெரியாதா ஆணையர் மதுரை மாநகராட்சிக்கு தேவையில்லையே?

 அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் காப்பாற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் இணை இயக்குநர் முருகன் ஐ.பி.எஸ்  நடத்திய மெகா நாடகம் தான் தீபாவளி ரெய்டு்…

 

 

Comments

comments