அமைச்சர்களின் சொகுசு பங்களாக்களுக்கு – பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ரூ2.74கோடி

சென்னை அடையாறு கீரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்களின் பங்களாக்களுக்கு பராமரிப்பு செலவு, குடி நீர் செலவு, பர்னீச்சர் செலவு என ஆண்டுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் தார் பாய் வாங்க கூட பணம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

 பராமரிப்பு செலவு…

ஜனவரி 2016 –மார்ச் 2016 – ரூ82.02 இலட்சம்

2016 ஏப்ரல் – மார்ச் 2017 – ரூ2.40கோடி

2017 ஏப்ரல் – 2018  மார்ச் – ரூ2.74கோடி

2018 ஏப்ரல் – 2019 ஜனவரி – ரூ.1.80கோடி..

            குடி நீர் செலவு…

 ஜனவரி 2016 –மார்ச் 2016(மூன்று மாதங்களுக்கு) ரூ27.71 இலட்சம்.

 ஏப்ரல் 2016 –மார்ச் 2017 – ரூ30 இலட்சம்..

 ஏப்ரல் 2017 –மார்ச் 2018 – ரூ68.80 இலட்சம்..

 ஏப்ரல் 2018 – ஜனவரி 2019 – ரூ29.93 இலட்சம்.

 பர்னீச்சர் செலவு…

 ஏப்ரல் 2017 – மார்ச் -2018 – ரூ1.20கோடி..

 ஏப்ரல் 2018 – ஜனவரி – 2019 – ரூ2.23 இலட்சம்..

     முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒ.பன்னீர்செல்வம் ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்த 2017-18 ஆண்டில் பராமரிப்பு, குடி நீர் செலவு, பர்னீச்சர் செலவு மிக அதிமாகி உள்ளது..ஏன்..

    வாக்களித்த அப்பாவி மக்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.. ஆனால் அமைச்சர்கள் குடியிருக்கும் சொகுசு பங்களாக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது..

               வாக்களிக்க போகும் அப்பாவி மக்களே சிந்தியுங்கள்…

     

 

 

 

                         

 

 

Comments

comments